Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.... புதிய சாதனை படைக்கிறது இங்கிலாந்து!

Recommended Video

இந்தியாவுக்கு எதிரான போட்டி....புதிய சாதனை படைக்கிறது இங்கிலாந்து!- வீடியோ

டெல்லி: இந்தியாவுக்கு எதிராக ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து அணி புதிய சாதனை படைக்கப் போகிறது. அந்த டெஸ்ட் போட்டி, அந்த அணி பங்கேற்கும் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியா வெல்ல, ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்து வென்றது.

england to play its thousand test match

இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ல் துவங்குகிறது. பிர்மிங்ஹாமில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும். ஆயிரம் டெஸ்ட்களில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெறும்.

1877ல் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா விளையாடின. இதுவரை 999 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து அதில் 357ல் வென்றுள்ளது. 297ல் தோல்வி கண்டது. 345 டெஸ்ட்கள் டிராவில் முடிந்தன.

ஆஸ்திரேலியா இதுவரை 812 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் 530 போட்டிகளிலும் விளையாடியுள்ளன. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

1932ல் டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்ற 6வது அணியான இந்தியா இதுவரை 522 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. அதில் 145ல் வெற்றி, 160ல் தோல்வி, 216ல் டிலரா கண்டுள்ளது. ஒரு டெஸ்ட் டையில் முடிந்தது.

இரு அணிகளும் இதுவரை 117 முறை மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 43 முறையும், இந்தியா 25 முறையும் வென்றுள்ளன. 49 டெஸ்ட்கள் டிராவில் முடிந்துள்ளன.

Story first published: Tuesday, July 24, 2018, 16:22 [IST]
Other articles published on Jul 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+