Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவிப்பு.. “என்னால் தாங்க முடியவில்லை”.. உருக்கமான பதிவுடன் விலகல்!

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா பயோ பபுள் காரணமாக மன நிம்மதி வேண்டும் என நீண்ட காலமாக ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் தான் அணிக்கு திரும்பினார்.

இதன் பின்னர் தான் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டார்.

மோசமான ஃபார்ம்

மோசமான ஃபார்ம்

அவரின் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் அணி நியூசிலாந்து தொடர், இந்தியாவுடனான கடைசி போட்டி என தொடர் வெற்றிகளை கண்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கினாலும், பென் ஸ்டோக்ஸால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியவில்லை. இந்தியாவுடனான 3 ஒருநாள் போட்டிகளில் முறையே 27, 21, 0 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார்.

ஸ்டோக்ஸ் ஓய்வு

ஸ்டோக்ஸ் ஓய்வு

இந்த சூழலில் தான் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னால் 50 ஓவர் கிரிக்கெட்டில் 100% பங்களிப்பை அணிக்கு தரமுடியவில்லை. இதனால் தான் இப்படிப்பட்ட கடுமையான முடிவை நான் எடுத்தேன். இங்கிலாந்துக்காக நான் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் எனக்கு பொன்னான ஒன்று.

என்னால் முடியவில்லை

என்னால் முடியவில்லை

3 வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே சமயத்தில் என்னால் கையாள முடியவில்லை. உடல் ஒத்துழைக்கவில்லை என்பது மட்டும் காரணம் அல்ல. போட்டி அட்டவணைகளும் அடுத்தடுத்து உள்ளதால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே எனது இடத்தை வேறு யாருக்கேனும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த 11 வருட கிரிக்கெட் பயணம் மிக அழகான அனுபவங்களை கொடுத்துள்ளது என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

கடைசிப்போட்டி?

கடைசிப்போட்டி?

இங்கிலாந்து அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு, பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறவிருக்கிறார். அவரின் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் பயணம் சிறப்பாக அமைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரெக்கார்ட்கள்

ரெக்கார்ட்கள்

இதுவரை 104 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 2919 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 சதங்களும் 21 அரைசதங்களும் அடங்கும். பந்துவீச்சை பொறுத்தவரையில் 87 இன்னிங்ஸ்களில் 74 விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார்.

Story first published: Monday, July 18, 2022, 18:37 [IST]
Other articles published on Jul 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+