Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம்ல இருந்து தூக்கிட்டீங்க..! இப்ப பாருங்க..! பொசுக்குனு அந்த முடிவு எடுத்த ஸ்டார் பிளேயர்

லண்டன்: 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த மொயின் அலி, சில காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தற்போது ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அந்த போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். 2வது இன்னிங்சில் அவர் எடுத்ததோ வெறும் 4 ரன்கள். 2 இன்னிங்சிலும் அவர் சுழல்பந்து வீச்சாளர் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அனைத்திலும் சொதப்பல்

அனைத்திலும் சொதப்பல்

பேட்டிங்கில் சொதப்பிய அவர், பாரபட்சம் பார்க்காமல் பவுலிங்கிலும் சொதப்பு, சொதப்பு என்று சொதப்பு தள்ளினார். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தினார்.

திடீர் நீக்கம்

திடீர் நீக்கம்

அவரின் இந்த மோசமான செயல்பாடு காரணமாக இங்கிலாந்து, அவரை அடுத்த இரண்டாவது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இந் நிலையில் மொயின் அலி தற்போது அதிரடியாக புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

கோபத்தில் மொயின் அலி

கோபத்தில் மொயின் அலி

இங்கிலாந்து நிர்வாகத்தின் இந்த முடிவு அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்துள்ளதால், சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.

திடீர் ஓய்வு

திடீர் ஓய்வு

அதன்படி இனி வரும் போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொள்வார். பின்னர் சில மாதங்களுக்கு கழித்து, அணியில் இணைவார். அவர் விளையாடும் கவுன்டி அணியான வொர்செஸ்டர்சைர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Story first published: Wednesday, August 14, 2019, 11:55 [IST]
Other articles published on Aug 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+