இரவில் மகளுடன் மருத்துவமனையில்.. மறுநாள் களத்தில் சதம்..! ராய்க்கு குவியும் வாழ்த்துகள்
நாட்டிங்ஹாம்: மகளின் பாசப்போராட்டத்தையும் கடந்து, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதமடித்த இங்கிலாந்து வீரருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4வது ஒரு நாள் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 340 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த இங்கிலாந்து 49.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர் ராய் அதிரடியாக விளைாயாடி 114 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3க்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருது
2 மணி நேரம் மட்டுமே ஓய்வு... பின்னர் மைதானத்திற்கு சென்று விளையாடிய ராய் சதம் அடித்துள்ளார். ராய் அதிரடி சதமடித்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்ததால்தான் மிடில் ஆர்டர்கள் சரியாக ஆடாதபோதிலும் இங்கிலாந்து அணியால் கடைசி ஓவரில் வெல்ல முடிந்தது. அந்தளவிற்கான நல்ல அடித் தளத்தை அமைத்து கொடுத்தார். எனவே, போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் ராய் தட்டி சென்றார்.

கடினமான சூழல்
போட்டியின் வெற்றிக்கு ஜேசன் ராய் பேசியதாவது: நான் அடித்த சதம் மிகவும் மறக்க முடியாத ஒன்று. ஒரு கடினமான சூழலில் இருந்து வந்து அணியின் வெற்றிக்காக விளையாடினேன். இரவு முழுவதும் தூங்காமல் 2 மணி நேர ஓய்வுக்கு பிறகே பயிற்சிக்கு வந்தேன். இது மிகவும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றார்.

குவியும் வாழ்த்துகள்
ஐபிஎல் தொடர் பைனலில் காலில் ரத்தம் வடிய சென்னை அணியின் வெற்றிக்காக போராடிய வாட்சனை ரசிகர்கள் சமூகவலை தளங்களில் புகழ்ந்து தள்ளினர். தற்போது ஜேசன் ராய் மகளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தூங்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இங்கிலாந்து ரசிகர்கள் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர்.

Click it and Unblock the Notifications