Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோப்ரா ஆர்ச்சர், ராய்..!! இது உங்களுக்கு தேவையா? கடைசியில் என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா..?

லண்டன்:இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு, போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்திருக்கிறது ஐசிசி.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

England players archer, roy and pakistan fined for icc breach

பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 14வது ஓவரில் ஜேசன் ராய் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். அப்போது அவர் தகாத வார்த்தையை பயன் படுத்தியதாக தெரிகிறது. அதனால் அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இதே ஆட்டத்தில் மற்றொரு இங்கிலாந்து வீரரான ஆர்ச்சர், நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதாவது, பாகிஸ்தான் பேட் செய்யும் போது 27வது ஓவரில் அவர் வீசிய பந்தை வைட் என நடுவர் தெரிவித்ததால் அவர் அதிருப்தி அடைந்தார்.

அதற்காக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ராய் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரின் மீது ஒழுங்குமுறைப் பதிவுகளில் ஒரு சஸ்பென்ஷன் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. 2 வருட காலத்திற்குள் நான்கு சஸ்பென்ஷன் புள்ளிகள் பெற்றால் அந்த வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஆமை வேகத்தில் பந்து வீசிய பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. அதன்படி, கேப்டன் சர்ப்ராஜ் அகமதுக்கு 20 சதவீதம் அபராதமும் மற்ற வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 10 அபராதமும் ஐசிசி விதித்துள்ளது.

Story first published: Wednesday, June 5, 2019, 13:21 [IST]
Other articles published on Jun 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+