Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை இவ்வளவு அழகான ஊரா.. பார்க்க இப்படி இருக்கு.. ஆச்சர்யப்பட்ட இங்கிலாந்து வீரர்கள்.. செம நியூஸ்

சென்னை: இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை மாநகரின் அழகை பார்த்து வியந்து போய் உள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியிலேயே சென்னையில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடி காட்டி வருகிறார்கள்.

அதிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் எடுத்து இந்திய அணியை புரட்டி எடுத்துள்ளார். இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டை இன்று எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி போனார்கள். இங்கிலாந்து அணி 8 விக்கெட்டிற்கு 555 ரன்கள் எடுத்துள்ளது.

மைதானம்

மைதானம்

இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதற்காக கடந்த மாத இறுதியில் இந்தியா இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்தனர். அடையார் சீ பேஸ் அருகே கடலுக்கு அருகே இருக்கும் தனியார் சொகுசு ஹோட்டலில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை

சென்னை

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை மாநகரின் அழகை பார்த்து வியந்து போய் உள்ளனர். அதன்படி இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் தொடங்கி ஜோஸ் பட்லர் வரை சென்னையின் அழகை பாராட்டி உள்ளனர்.

அழகு

அழகு

ஜோப்ரா ஆர்ச்சர் தனது டிவிட்டில், இந்த வியூவை பார்த்தப்படி காலையில் தினமும் எழுவது கொஞ்சம் கூட அலுப்பை தராது என்று கூறியுள்ளார். சென்னைக்கு அருகே வங்ககடலில் சூரியன் உதிக்கும் வீடியோவை இவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

பட்லர்

அதேபோல் பட்லர் நேற்று தனது பேட்டியில், சென்னையில் விளையாடுவது நன்றாக இருக்கிறது. இந்த நகரம் மிகவும் அமைதியாக இருக்கிறது. ஆட்டத்தில் நன்றாக கவனம் செலுத்த முடிகிறது என்று குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.

கேட் கிராஸ்

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீராங்கனை கேட் கிராஸ் தனது டிவிட்டில்.. இந்த போட்டோவில் சென்னை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. ஒருநாள் சென்னைக்கு செல்வன் என்று நம்புகிறேன் குறிப்பிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

சென்னை சூப்பர் குயின்ஸ்

அதேபோல் பெண்களுக்கான ஐபிஎல் போட்டிகள் பெரிய அளவில் நடக்கும் போது சென்னைக்கு ஆட விருப்பம். சென்னை சூப்பர் குயின்ஸ் அணியில் ஆடுவேன் என்றும் கேட் கிராஸ் கூறியுள்ளார்.

Story first published: Sunday, February 7, 2021, 9:33 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+