நேராக ஹோட்டல்.. கடுமையான குவாரன்டைன்.. சென்னைக்கு வந்த இங்கிலாந்து வீரர்கள்.. ஒரு சின்ன சிக்கல்!
சென்னை: இந்தியாவில் டெஸ்ட் தொடரில் ஆட உள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தற்போது சென்னை வந்துள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து இடையே அடுத்த மாதம் நடக்க உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது.

சென்னை
டெஸ்ட் தொடரில் ஆட உள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் இலங்கையில் இருந்து தற்போது சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில் சென்னை வந்துள்ள வீரர்கள், விமான நிலையத்தில் இருந்து தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவார்கள்.

செல்ல முடியாது
இவர்கள் வெளியே எங்கேயும் செல்ல முடியாது. ஹோட்டலில் உள்ள வேறு தளங்களுக்கு செல்ல முடியாது. அதேபோல் ஹோட்டலில் இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் மீட்டிங் ஹாலில் மட்டுமே இவர்கள் சந்தித்து மீட்டிங் நடத்த முடியும்.

சிக்கல்
இதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி இரண்டு அணிகளும் மோத உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி மாலை இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மூன்று நாட்கள் மட்டுமே இவர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். பெரிய அளவில் இவர்கள் பயிற்சி இன்றி இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளனர்.

சென்னை பிட்ச்
சென்னை பிட்ச் தற்போது ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பயிற்சி இல்லாமல் இவர்கள் களமிறங்குவது இங்கிலாந்து அணிக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது .


Click it and Unblock the Notifications