ஜேம்ஸ், வோக்ஸ், பேர்ஸ்டோ.. லார்ட்ஸைக் கலக்கிய இங்கிலாந்து!
Recommended Video

ஜேம்ஸ், வோக்ஸ், பேர்ஸ்டோ...லார்ட்ஸைக் கலக்கிய இங்கிலாந்து வீரர்கள்- வீடியோ
லார்ட்ஸ் : லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் சில குறிப்பிடத்தகுந்த சாதனைகளையும் செய்துள்ளனர். அதனை பற்றிய சிறு தொகுப்பு:

ஜேம்ஸ் ஆண்டர்சன்
- இங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் தனது 550 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
- இந்திய அணிக்கெதிராக அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகபந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார் (99 விக்கெட்கள்)
- ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நான்காமிடம் பிடித்தார்.
- இந்த வரிசையில் வரும் முதல் வேகப்பந்துவீச்சாளர் இவரே.
- அவர் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 103 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
- இலங்கை அணியின் முரளிதரன் எஸ்எஸ்சி மைதானத்தில் 166 விக்கெட்கள் வீழ்த்தியதே முதல் சாதனையாகும்.
- இரண்டாவது இன்னிங்சில் முரளி விஜய் விக்கெட்டை வீழ்த்திய போது அதிக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய இரண்டாவது வீரர்.
- மொத்தம் 150 ஓப்பனிங் விக்கெட்கள். முதலில் இருப்பவர் மெக்ராத் (155 ஓப்பனிங் விக்கெட்கள்)

கிறிஸ் வோக்ஸ்
- கிறிஸ் வோக்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.
- லார்ட்ஸ் மைதானத்தில் சதம் மற்றும் 10 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாமிடம் பெற்றார்.
- வோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார்.
- வோக்ஸ்-பேர்ஸ்டாவ் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 189 ரன்களை குவித்தனர்.
- இந்திய அணிக்கெதிராக 6ஆவது விக்கெட்டிற்கு இதுவே அதிகபட்சமாகும்.
- இந்திய அணிக்கெதிரான போட்டியில் 7ஆம் நிலையில் களமிறங்கி அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் (125* ரன்கள்)
Story first published: Monday, August 13, 2018, 11:07 [IST]
Other articles published on Aug 13, 2018


Click it and Unblock the Notifications