For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"திருப்பிக் கொடுக்கணும்".. இங்கிலாந்து மீட்டிங்கில் காரசார விவாதம் - மூன்று அடுக்கு "பிளான்" ரெடி

ஹெட்டிங்லே: இந்திய அணியை நிச்சயம் ஹெட்டிங்லே டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று இங்கிலாந்தில் கேம்ப்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை (ஆக.25)ம் தேதி ஹெட்டிங்லேவில் நடைபெறுகிறது

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தங்களை தயார் செய்து வருகின்றனர். குறிப்பாக, இங்கிலாந்து சற்று அக்ரெஸ்ஸிவ் மோடில் உள்ளது.

 வரலாறு அறியும்

வரலாறு அறியும்

காரணம், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இந்தியாவிடம் சந்தித்த அவமானகரமான தோல்வி தான். வெற்றிப் பெறும் தருவாயில் இருந்த அந்த அணி, தேவையில்லாமல் பும்ராவை டார்கெட் செய்கிறேன் என்று, வெற்றிப் பெறுவதை மறந்து விளையாடியது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி, 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதை வரலாறு அறியும். இந்த நிலையில் தான், நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டுவிட்டது எனலாம். பிளேயிங் லெவன் கூட முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அணியில் 'பலத்த' மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி. சில எதிர்பாராத நீக்கங்கள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன.

 பெரிய அவமதிப்பு

பெரிய அவமதிப்பு

இதுகுறித்து இங்கிலாந்து அணி சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் காரசாரமாக பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும், சாஃபட்டான மோடில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. குறிப்பாக, "லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததைவிட, இங்கிலாந்து வீரர்களை வம்பிழுத்து தோற்றதால் நமது ரசிகர்களே நம்மை கேலி செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. தவிர, மீடியாக்கள் அனைத்தும், பும்ராவை வம்பிழுத்ததால் தான், இங்கிலாந்து தோல்வி பெற நேரிட்டது என்று எழுதி இருக்கிறார்கள். நமது மண்ணில் இது நமக்கு கிடைத்த பெரிய அவமதிப்பாகும். 2019ல் உலகக் கோப்பை வென்ற போது நமக்கு கிடைத்த பேர், இந்தியாவுக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் கெட்டுவிட்டது. இதனை நாம் மாற்றியே ஆக வேண்டும்" என்று மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அதுமட்டுமின்றி, ஜோ ரூட் தவிர மற்ற எவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்தும் மீட்டிங்கில் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக, ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதாக தெரிகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை எனில், ஜோஸ் பட்லர் நிச்சயம் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று நேரடியாகவே குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேல், இந்திய அணியை வீழ்த்தும் மூன்று முக்கிய வியூகங்களை பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என்று இங்கிலாந்து வகுத்துள்ளதாக தெரிகிறது.

 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்

அதன்படி, இங்கிலாந்து அணியின் முதல் டார்கெட் இந்திய ஓப்பனர்களை விரைவில் பிரிப்பது என்பதே. இதில், குறிப்பாக, ரோஹித்தின் வீக் பாயிண்ட்டை அதிகம் பயன்படுத்தி, அவரை விரைவில் அட்டமிழக்கச் செய்ய வென்றும் வியூகம் வகுத்திருப்பதாக தெரிகிறது. அதவாது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை விரைவில் பிரிக்க வேண்டும், அதற்காக ரோஹித் டார்கெட் செய்யப்பட வேண்டும் என்பதே இங்கிலாந்தின் பிளான் 'ஏ' என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து அடுத்ததாக வைக்கும் டார்கெட் கேப்டன் விராட் கோலி. என்னதான், இவர் இப்போது ஃபார்மில் இல்லையென்றாலும், எந்நேரமும், எந்த இன்னிங்ஸிலும் அவர் ஃபார்முக்கு வரலாம் கேப்டன் கோலியை மிக விரைவாக அவுட்டாக்க வேண்டும் என்று வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 தோல்விக்கு முக்கிய காரணம்

தோல்விக்கு முக்கிய காரணம்

இறுதியில், இங்கிலாந்து கடைசி டார்கெட், இந்திய ஃபேஸ் பவுலர்களை நிதானமாக எதிர்கொள்வதாகும். இந்தியாவின் மிகப்பெரிய வலிமையான இருப்பது வேகப்பந்துவீச்சு தான். இந்தியாவின் பவுலிங் யூனிட்டில் சிராஜை மிக கவனமாக கையாள வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். பும்ரா, ஷமி ஆகியோர் டாப் பவுலர்கள் என்பதால், அவர்களிடம் மிக நிதானமாக விளையாடி, சிராஜிடம் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கேஷுவலாக பறிகொடுத்தது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 4 என மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் சிராஜ். ஸோ, இம்முறை அவருக்கு நிச்சயம் விக்கெட்டே கொடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்

 அஷ்வினுக்கு இடமில்லை

அஷ்வினுக்கு இடமில்லை

அதுமட்டுமின்றி, நாளை மூன்றாவது போட்டி நடைபெறும் ஹெட்டிங்லே இங்கிலாந்தின் கோட்டை எனலாம். இங்கு உள்ளூர் அணியை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது என்பதும் மறுக்க முடியாதது. இதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இங்கிலாந்து தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த போட்டியில் அஷ்வின் சேர்க்கப்படலாம் என்று பேச்சு அடிப்பட்டது. ஆனால், சமீபத்திய தகவல்கள் மீண்டும் அஷ்வினுக்கு இடமில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றன. இதனை இங்கிலாந்து எதிர்பார்க்கவிலை. அஷ்வின் சேர்க்கப்படுவார் என்றே இங்கிலாந்தும் எதிர்பார்த்தது. அதற்கேற்ப சில வியூகங்களும் வகுக்கப்பட்டிருந்தன. உண்மையில், அஷ்வினை நினைத்து அந்த அணி சற்று கலக்கத்தில் தான் இருந்தது. ஹெட்டிங்லே பிட்சில் அவரால், நிச்சயம் சவால் அளிக்க முடியும் என்று இங்கிலாந்து எண்ணியது. இப்போது நிம்மதியடைந்துள்ளது. ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓப்பனிங்கில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்பதால், ரோஹித் - ராகுல் இன்க்ளூஷனில் எந்த ஆச்சர்யமும் இல்லை. மிடில் ஆர்டரில் தான் முக்கிய மாற்றமாக புஜாரா நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி சேர்க்க்கப்படும் பட்சத்தில், அது இந்தியா எடுக்கும் மிக முக்கியமான முடிவாக அமையும்.

Story first published: Tuesday, August 24, 2021, 19:05 [IST]
Other articles published on Aug 24, 2021
English summary
england ready to face india pace attack - இங்கிலாந்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+