Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு தினப் போட்டியில் அதிக ரன்கள்.... ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து சாதனை!

Recommended Video

ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வறுத்தெடுத்த இங்கிலாந்து- வீடியோ

டிரென்ட்பிரிட்ஜ்: ஐசிசி உலகத் தரவரிசையில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலியா அணிக்கு, மரண அடி கொடுத்ததுடன், ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருதினப் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் நடக்கிறது.

இதில் டாஸை வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 480 ரன்கள் குவித்தது.

ஒருதினப் போட்டிகளில் ஆண்கள் அணி அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன், 2016ல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 444 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.

துவம்சம் செய்தார் ஹேல்ஸ்

துவம்சம் செய்தார் ஹேல்ஸ்

இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 92 பந்துகளில் 16 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 147 ரன்கள் குவித்தார். ஜானி பேர்ஸ்டோ 92 பந்துகளில் 15 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 139 ரன்கள் குவித்தார்.

விரட்டி விரட்டி அடித்தனர்.

விரட்டி விரட்டி அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் 82 ரன்கள் எடுத்த துவக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ இணைந்து முதல் விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி இரண்டாவது விக்கெட்டுக்கு 151 ரன்கள் குவித்தது.

மகளிர் அணி சாதனை

மகளிர் அணி சாதனை

ஆடவர் பிரிவில் இங்கிலாந்தின் இந்த ஸ்கோரே அதிகபட்ச ஸ்கோராகும். அதே நேரத்தில் மகளிர் பிரிவில் சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்தது.

உலகக் கோப்பைக்கு தயார்

உலகக் கோப்பைக்கு தயார்

அடுத்த ஆண்டு உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், ஜாசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஹாலட், ரூட், அலி என முக்கியமான வீரர்கள் பார்மில் உள்ளது இங்கிலாந்து அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, June 20, 2018, 9:14 [IST]
Other articles published on Jun 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+