Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்று வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து..பேட்டிங் சாதகமான ஆடுகளத்தில் அபாரம்..பாகிஸ்தான் படுதோல்வி

ராவல்பிண்டி : பாகிஸ்தானுக்கு எதிரான முதுல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் மண்ணில் 22 ஆணடுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில், பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து பெறும் 3வது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இதுவரை நடைபெற்ற டெஸ்ட் கிரக்கெட்டிலேயே இது போன்று பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை வேறு எங்கேயும் பார்த்திருக்க முடியாது. அந்த அளவு சிமெண்ட் தரை பிட்சில் இங்கிலாந்து அணி தனது அபார பந்துவீச்சால் வெற்றி பெற்று இருக்கிறது.

பேட்டிங் சொர்க்கம்

பேட்டிங் சொர்க்கம்

17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஆனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், இங்கிலாந்து அணி முதல் நாளில் மட்டும் 506 ரன்களை குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மேலும் ஆடுகளம் குறித்து மோவசமான விமர்சனங்களும் கிடைத்தது.

ரன் வேட்டை

ரன் வேட்டை

இங்கிலாந்து அணியில் 4 வீரர்கள் சதம் விளாச , முதல் இன்னிங்சில் அந்த அணி 657 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் விளையாடியது.தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் ஆகியோர் சதம் விளாச, பாபர் அசாமும், 136 ரன்களை குவித்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 579 ரனகள் குவித்தது.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

78 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சிலும் ஒருநாள் கிரிக்கெட்டை போல அதிரடியாக விளையாடியது. ஷாக் கிராலி, ஜோ ரூட், ஹஹாரி புருக் ஆகியோர் அரைசதம் கடந்தனர் . இதன் மூலம் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அப்துல்லா ஷபிக், 6 ரன்களிலும், அசார் அலி ரன் எடுக்காத நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். கேப்டன் பாபர் அசாம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பரபரப்பான கட்டம்

பரபரப்பான கட்டம்

இதனையடுத்து 5வது நாள் தொடக்கத்தில், பாகிஸ்தான் அணி 80 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. . தற்போது கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 263 ரன்களும், இங்கிலாந்து வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவைப்ட்டது. . கைவசம் இன்னும் 8 விக்கெட் உள்ளன. இதனால் இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால், ராவல்பிண்டி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இங்கிலாந்தின் ஆயுதம்

இங்கிலாந்தின் ஆயுதம்

இமாம் உல் ஹக் 48 ரன்களும், அசார் அலி 40 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் அந்த அணியின் ஷகில், முகமது ரிஸ்வான் ஜோடி ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கில் விளையாடியது. இதில் ஷகில் 76 ரன்களும், ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஆயுதம் கை கொடுத்தது.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

இருவரும் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிக்காக போராடியது. தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விங்கை பயன்படுத்தி 40 வயதான ஆண்டர்சனும், இளம் வீரர் ராபின்சனும் அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டம் மடிய இன்னும் 10 நிமிடங்களே இருந்த நிலையில், பாகிஸ்தானின் கடைசி விக்கெட்டை ஜேக் லீச் வீழ்த்தினார்.

இங்கிலாந்து சாதனை

இங்கிலாந்து சாதனை

இதன் மூலம் டிராவாகும் என எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் போட்டியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அ வென்றது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு எடுப்படாத நிலையில், இங்கிலாந்த வேகப்பந்துவீச்சாளர்கள் 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்த அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில உள்ளது.

Story first published: Monday, December 5, 2022, 17:54 [IST]
Other articles published on Dec 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+