லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில், வீரர்கள் மாற்றம் செய்யப்படாமல், டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடியவர்களே ஆட உள்ளனர்.
இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அபாரமாக கைப்பற்றியது. 3ல் இங்கிலாந்தும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றநிலையில் ஒரு போட்டி டிரா ஆனது.

வெற்றி களிப்பில் உள்ள இங்கிலாந்து அணி, வரும் 25ம்தேதி முதல் தொடங்க உள்ள ஒரு நாள் போட்டிக்கான அணி வீரர்கள் பெயரை அறிவித்துள்ளது. டெஸ்ட் அணியில் இருந்த அதே வீரர்கள் தவிர மேலும் நால்வரை கொண்டு 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அணி விவரம்: அலிஸ்டர் குக், கேரி பல்லான்ஸ், இயான் பெல், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஃபின், கிறிஸ் வோகஸ், கிறிஸ் ஜோர்டான், ஜோ ரூட், பென் ஸ்டோர்க்ஸ், இயோன் மோர்கன், ஜேம்ஸ் டிரட்வெல், ஹேரி குர்னே, அலெக்ஸ் ஹேல்ஸ்.
இதில் இயோன் மோர்கன் உள்ளிட்ட கடைசி நால்வரும் ஒருநாள் போட்டிக்காக புதிதாக சேர்க்கப்பட்டவர்கள். எஞ்சிய 11 பேரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்கள்.