Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி-24 ஆண்டுக்குப் பின் ஆஷஸை வென்றது

Tim Bresnan takes the wicket of Ponting
ல்போர்ன்: 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஷஸ் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ், 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை அது பெற்று இதை சாதித்தது.

எப்படி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அனல் பறக்குமோ அதேபோலத்தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும். அதிலும் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் எப்போதுமே இரு அணிகளுக்கும் கெளரவப் பிரச்சினையாகும்.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடர் என்று அழைக்கப்படுகிறது. இதை கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவே வென்று வந்தது. இதனால் இங்கிலாந்து அணி கடும் ஏமாற்றத்தில் இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அணி தனது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று விட்டது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதி வருகின்றன.

இதில் இங்கிலாந்து 2 டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. ஒரு டெஸ்ட்டை ஆஸ்திரேலியா வென்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது.

மெல்போர்ன் நகரில் 4வது போட்டி நடந்தது. இதில் இன்னிங்ஸ், 157 ரன்கள் வித்தியாசத்தில் இன்று இங்கிலாந்து வென்றது. கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் டிரா செய்தாலே இங்கிலாந்துக்குப் போதும்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்கில் ஆஸ்திரேலியா 98 ரன்களுக்குச் சுருண்டு போனது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து 513 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி கவிழ்ந்தது.

கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+