Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நைட் கிளப்பில் குடித்துவிட்டு கலாட்டா.. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கைது!

லண்டன் : இரவு விடுதியில் மது போதையில் தகராறு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிஸ்டல் நகரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்ததும் சக வீரர் அலெக்ஸ் ஹேல்சுடன் இரவு விடுதிக்கு சென்ற ஸ்டோக்ஸ், மதுபானம் அருந்தியதுடன் அங்கிருந்த ஒரு நபருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் ஸ்டோக்ஸ் தாக்கியதில் அந்த நபர் முகத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 போலீசார் அதிரடி

போலீசார் அதிரடி

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பிரிஸ்டல் கவுன்டி போலீசார், ஸ்டோக்சை கைது செய்துள்ளனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 உடல் தகுதி

உடல் தகுதி

எனினும் குற்றச்சாட்டு பதிவு செய்யாமல், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து ஸ்டோக்ஸ் விளையாடுவதற்கான முழு உடல் தகுதி உள்ளதா என்று கிரிக்கெட் வாரியம் ஆலோசித்ததாக தெரிகிறது.

 போட்டியில் இல்லை

போட்டியில் இல்லை

இதன் முடிவில் வீரர்களின் மோசமான செயல் காரணமாக லண்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற உள்ள 4வது ஒருநாள் போட்டியில் இருந்து ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 பயிற்சி ஆட்டத்தில் இல்லை

பயிற்சி ஆட்டத்தில் இல்லை

அணியிலிருந்து நீக்கப்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஸ்டோக்ஸ் ஏற்கனவே 2012, 2013, 2014ல் இதே போன்று குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 27, 2017, 11:29 [IST]
Other articles published on Sep 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+