Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் அஸ்வாரத்தையே தகர்த்த 21 வயது பவுலர்.. பயிற்சி போட்டியில் பெரும் ஷாக் - முழு விவரம்

இந்திய அணியின் அஸ்வாரத்தையே ஆட்டிப்பார்த்துள்ளார் இங்கிலாந்தின் 21 வயது இளம் வீரர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி, கவுண்டி அணியுடன் இன்று பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

4 நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அனைத்து வீரர்களுக்கும் பயிற்சி வேண்டும் என்பதால், இந்திய வீரர்கள் பும்ரா, ரிஷப் பண்ட், பிரஷித் கிருஷ்ணா, சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் கவுண்டி அணிக்காக விளையாடி வருகின்றனர்.

இளம் வீரரின் அச்சுறுத்தல்

இளம் வீரரின் அச்சுறுத்தல்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா நிதான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரம் இந்த ஜோடி நீடிக்கவில்லை. இங்கிலாந்தின் 21 வயது பவுலர் ரோமன் வாக்கர் தனது அட்டகாசமான பவுலிங்கால் அடுத்தடுத்து விக்கெட் எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 25 ரன்களுக்கு அவுட்டானார்.

முக்கிய விக்கெட்கள்

முக்கிய விக்கெட்கள்

இதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் மிக மோசமாக தடுமாறினர். ஹனுமா விஹாரி 3 ரன்களுக்கும், நம்பிக்கை வீரரான ரவீந்திர ஜடேஜா 13 ரன்களுக்கும் வெளியேறினர். இந்திய அணிக்கு எதிராக ஜஸ்பிரித் புர்மாவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாக நிலையில் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் கூட ஆகாத இளம் வீரர் 3 முன்னணி வீரர்களை சாய்த்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கோர் நிலவரம்

ஸ்கோர் நிலவரம்

தற்போது வரை 6 ஓவர்களை வீசியுள்ள ரோமன் வாக்கர் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்துள்ளார். இதனால் இந்திய அணி உணவு இடைவேளை வரை 90 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

Story first published: Thursday, June 23, 2022, 18:28 [IST]
Other articles published on Jun 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+