For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போதை மருந்து.. ! சிக்கிய அந்த பிரபல கிரிக்கெட் வீரர்… 21 நாட்கள் விளையாட தடை

லண்டன்: பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் போதை மருந்து பயன்படுத்தியதற்காக 21 நாட்கள் விளையாட தடை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 30 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2014 ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

Englands Alex Hales banned for 21 days for recreational drug use

இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் போதை மருந்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் அலெக்ஸ் ஹேல்ஸ் வரயிருக்கும் ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பைத் தொடரில் விளையாட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த விவகாரத்தால் அவர் உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு பெருத்த சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஆனால் இது குறித்து ஹேல்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தடை முடிந்த பின்னர் இங்கிலாந்து அணியுடன் அவர் பயிற்சி மேற்கொள்வார். சஸ்பெண்டை ஹேல்ஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Story first published: Saturday, April 27, 2019, 11:44 [IST]
Other articles published on Apr 27, 2019
English summary
England's Alex Hales banned for 21 days for recreational drug use.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+