Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிஸ்கோத்தி, சல்சா, பிரி பிரி.. இங். வீரர்களின் 82 பக்க சாப்பாட்டு லிஸ்ட்...!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் ஆசஷ் தொடரை சந்திக்கவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மிகப் பெரிய சாப்பாட்டுப் பட்டியலை ஆஸ்திரேலியாவிடம் வழங்கியுள்ளனர்.

என்னென்ன சாப்பாடு வேண்டும், அதை எந்த நேரத்தில் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்று பெரிய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனையும் போட்டு லிஸ்ட்டை நீட்டியுள்ளார்களாம்.

82 பக்கம் கொண்ட அந்த சாப்பாட்டுப் பட்டியலில் கிட்டத்தட்ட 200 ஐட்டங்கள் இடம் பெற்றுள்ளனவாம்.

இந்த லிஸ்ட்டை வைத்து இப்போது கேலிக் கட்டுரைகளைப் போட்டு கும்மியடித்து வருகின்றனவாம் ஆஸ்திரேலிய மீடியாக்கள்.

ஆஸ்திரேலியாவில் ஆசஷ் தொடர்

ஆஸ்திரேலியாவில் ஆசஷ் தொடர்

ஆசஷ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் தொடங்குகிறது. எப்படி இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் பரபரப்பாக இருக்குமோ, அதை விட பாதி பரபரப்பை இந்த ஆசஷ் தொடர் போட்டிகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே கிளப்புவது வழக்கம்.

சாப்பாடுதாம்ப்பா முதல்ல

சாப்பாடுதாம்ப்பா முதல்ல

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்து அணியினருக்கான உணவுப் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு வழங்கியுள்ளதாம். அந்தப் பட்டியலைப் பார்த்துத்தான் அத்தனை பேரும் ஆஸ்திரேலியாவில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம்.

82 பக்கம்... 200 ஐட்டம்

82 பக்கம்... 200 ஐட்டம்

மொத்தம் 82 பக்கத்திற்கு அந்த மெனு உள்ளதாம். அதில் இடம் பெற்றுள்ள உணவுகளின் வகைகளோ 200 ஆகும்.

எப்ப தரனும்.. எப்படித் தரனும்...

எப்ப தரனும்.. எப்படித் தரனும்...

இந்த உணவுகளை எப்போது, எங்கே, எப்படி தர வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டுள்ளார்களாம்.

194 சாப்பாடு.. 6 வகை பானங்கள்

194 சாப்பாடு.. 6 வகை பானங்கள்

இந்த 200 ஐட்டங்களில் சாப்பாடு மட்டும் 194 ஆகும். மற்ற ஆறும் மது பான வகைகளாம்.

பிரி பிரி பிரெட் டோபு...

பிரி பிரி பிரெட் டோபு...

இந்த உணவுகளில் பிரி பிரி பிரெட் டோபு, டொமோட்டோ சல்சாவுடன் சேர்த்து. பிறகு குய்னோ கிரான்பெர்ரி பிரேக்பாஸ்ட் பார், முங்க் பீன் கறி, ஸ்பினாச்சுடன். பிஸ்டாச்சியோ, ஜிஞ்சர் பிஸ்கோத்தி ஆகியவை அடக்கம்.

நவம்பர் 21ல் முதல் டெஸ்ட்

நவம்பர் 21ல் முதல் டெஸ்ட்

நவம்பர் 21ம் தேதி இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பேனில் மோதவுள்ளன.

அகோரப் பசியாளர்களைப் பாருங்கள்.

அகோரப் பசியாளர்களைப் பாருங்கள்.

இங்கிலாந்து அணியின் இந்த சாப்பாட்டுப் பட்டியலை வைத்து ஆஸ்திரேலிய மீடியாக்கள் கேலி செய்து செய்தி போட்டு வருகின்றன. இதோ பாருங்கள் அகோரப் பசியாளர்களை.. உங்க வீட்டு 3 வயசுப் பையன் பரவாயில்லை என்று நினைப்பீர்கள்.. என்று டெய்லி டெலிகிராப் செய்தி போட்டுள்ளது.

நல்லா சாப்பிட வாங்கப்பா...

நல்லா சாப்பிட வாங்கப்பா...

சிட்னி மார்னிங் ஹெரால்ட் எழுதுகையில், நன்கு சாப்பிட்டு தூங்குவதற்காக வருகிறார்கள் போல என்று கிண்டலடித்துள்ளது.

அளவு மாறப்படாது...

அளவு மாறப்படாது...

தங்களது சாப்பாடு எந்த அளவில் இருக்க வேண்டும் என்றும், அதில் மாற்றம் இருக்கக் கூடாது என்றும் இங்கிலாந்து கண்டிஷனாக சொல்லியுள்ளதாம். மேலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும் தினசரி எவை தரப்பட வேண்டும் என்பதையும் லிஸ்ட்டாக போட்டு நீட்டியுள்ளார்களாம்.

முள் இல்லாத மீனேதான் வேண்டுமாம்

முள் இல்லாத மீனேதான் வேண்டுமாம்

மீன் வகையைப் பொறுத்தவரை முள் இல்லாத மீன் வகைகள்தான் தரப்பட வேண்டும் என்று கூறியுள்ளனறாம். எண்ணெய் கொஞ்சமாக ஊற்றியே அத்தனை உணவுகளையும் தயாரிக்க வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்களாம்.

எல்லாம் சரி.. ஆஸ்திரேலியாவில் வந்து பிட்ச்சில் உச்சா போய்டாதீங்க.. ரொம்ப ஷேமா போய்டும்.

Story first published: Monday, November 11, 2013, 12:28 [IST]
Other articles published on Nov 11, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+