Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா... என்ன செய்யறதுன்னு தெரியாம திண்டாட்டம்... இறுதி முடிவு!

கேப் டவுன் :தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒருநாள் போட்டி தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து இந்த முடிவை இரு அணிகளின் போர்டுகளும் எடுத்துள்ளன. இதையடுத்து ஒரு போட்டியிலும் விளையாடாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

முன்னதாக இரு அணிகளுக்கிடையில் டி20 தொடர் சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ளது.

டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் டி20 தொடர் சிறப்பான வகையில் நடத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த தொடரை 3க்கு 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றி கொண்டுள்ளது இங்கிலாந்து அணி.

வீரர்களுக்கு கொரோனா

வீரர்களுக்கு கொரோனா

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டித் தொடர் திட்டமிடப்பட்டிருந்தது. போட்டி துவங்குவதற்கு முன்னதாக அணி வீரர்களிடையே கொரோனா தாக்கம் குறித்த பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ் என வந்ததையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

வீரர்களுக்கு கொரோனா

வீரர்களுக்கு கொரோனா

கேப் டவுனின் ஒரு ஹோட்டலில் இரு அணி வீரர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கும் அடுத்ததாக இரு இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் இங்கிலாந்து வீரர்களின் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

போர்டுகள் கூட்டாக அறிவிப்பு

போர்டுகள் கூட்டாக அறிவிப்பு

இந்நிலையில், இந்த ஒருநாள் தொடரை கேன்சல் செய்வதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு போர்ட்களும் இணைந்து கூட்டாக முடிவெடுத்துள்ளன. இதையடுத்து போட்டிகளில் விளையாடாமல் இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

Story first published: Tuesday, December 8, 2020, 15:10 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+