Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோசமாக ஆடுறாங்க... உலக கோப்பை அவங்களுக்கு இல்லை.. இங்கிலாந்து பற்றி வாய் திறந்த கோலி

லண்டன்: உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மோசமாக ஆடுவது மிகவும் அதிர்ச்சி தருகிறது என்று இந்திய கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடர் துவங்கும் முன்பாக இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் ஆளுமை படைக்கும் அணிகளாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டது. இந்த அணிகளில் ஒன்றுக்கு தான் உலக கோப்பை என்று பலரும் கூறி வந்தனர்.

தற்போது இந்தியா, உலக கோப்பையில் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே தடுமாற்றத்துடன் வெற்றி பெற்றது. அதை தவிர மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்தியா பேட்டிங், பவுலிங்கின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்குள் ஜம்மென்று நுழைந்து விடும்.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

மற்றொரு பக்கம், இங்கிலாந்து எளிதில் அரையிறுதிக்குள் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொந்த மைதானத்தில் ஆஸ்திரேலயாவுக்கு எதிராக 64 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையிடம் 232 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமலும் தோற்றது. அதற்கு முன்பாக பாகிஸ்தானிடமும், தோல்வியை தழுவி, தற்போது அரையிறுதி வாய்ப்பையே இழுபறியில் வைத்திருக்கிறது இங்கிலாந்து.

சொந்த மண்ணில் ஆதிக்கம்

சொந்த மண்ணில் ஆதிக்கம்

இந் நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டம் குறித்து கேப்டன் கோலி கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவதை பார்த்திருப்போம்.

அழுத்தத்தால் வெற்றி

அழுத்தத்தால் வெற்றி

ஆனால், மிக பெரிய தொடரான உலக கோப்பையில் இப்படி தடுமாறி வருவது ஆச்சரியமளிக்கிறது. முன்னமே கூறியது போல், அழுத்தத்தை எந்த அணி சரியாக கையாள்கிறதோ அதுவே அன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணி.

எளிதாக நினைக்கக்கூடாது

எளிதாக நினைக்கக்கூடாது

இங்கிலாந்து அதனை செய்ய தவறி வருகிறது போல தெரிகிறது. இருப்பினும், அவர்களுடன் விளையாடும் போது, எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்று விட்டது. எனவே இந்தியாவுடனான போட்டி இங்கிலாந்துக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றார்.

Story first published: Sunday, June 30, 2019, 8:24 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+