ஜெயித்தால் ஓகே.. ஒருவேளை 2 போட்டியிலும் தோற்றால்.. இங்கிலாந்தை பதற வைக்கும் செமி பைனல் கணக்கு
லண்டன்: இங்கிலாந்து, அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என்பது குறித்த கணக்கீடுகள் தான் உலக கோப்பையின் தற்போதைய ஹாட் டாபிக்.
உலக கோப்பை போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அரையிறுதி போட்டியில் முதல் 4 இடங்களில் பிடிப்பது யார் என கடும் போட்டி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து 7 போட்டிகளில் 5 வெற்றிகள், ஒரு தோல்வி என 11 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து 7 போட்டிகளில் 3 தோல்விகள், 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.

4வது இடத்தில் யார்?
முதல் 3 இடங்கள் ஓரளவுக்கு யார் என்பது முடிவாகி இருக்கிறது. ஆனால்... 4வது இடம் தான் இப்போது ஏக சுத்தலில் இருக்கிறது. அந்த இடத்துக்கு அவ்வளவு போட்டி உருவாகி உள்ளது. மற்ற அணிகளை காட்டிலும் தொடரை நடத்தும் இங்கிலாந்துக்கு தான் தற்போது தலை வலியாக இருக்கிறது. ஏன் என்றால்... இங்கிலாந்து அணி அடுத்து மோத இருப்பது பலம் வாய்ந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன். இந்த இரு போட்டிகளும் கடுமையாக இருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஜெயித்தாலும் போட்டி
அதே நேரத்தில் பாகிஸ்தான் 7 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றிகள் 3 தோல்விகளுடன் இருக்கிறது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தான் விளையாட வேண்டியது பாக்கி. ஒருவேளை இரு போட்டிகளிலும் ஜெயித்தாலும் இங்கிலாந்துக்கு கடும் போட்டி இருக்கும்.

3 போட்டிகள்
வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோத வேண்டும். இரு ஆட்டங்களில் ஒன்றில் வென்றால்கூட 9 புள்ளிகளுடன் வங்கதேசமும் அரையிறுதி ரேசில் இடம்பெறும். அதேபோல இலங்கை 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்துவரும் 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.

14 புள்ளிகள் வரும்
இத்தகைய களேபரங்களுடன் 4வது இடத்துக்கு யாருக்கு என்பதை ஒரு நீண்ட கணக்கு மற்றும் புள்ளி விவரங்களுடன் பார்க்கலாம். தென் ஆப்ரிக்கா, நியூசி. அணிகளை வென்றால் 16 புள்ளிகள் வரும். தோற்றால் 14 புள்ளிகள். ஆக மொத்தம் அரையிறுதிக்கு ரிசர்வ் ஆகி விட்டது.

2லும் வென்றால் செமிபைனல்
சரி... இங்கிலாந்து அணிக்கு வருவோம்... இருப்பதிலேயே பல கணக்கீடுகள் இந்த அணிக்கு போட்டாக வேண்டும். இங்கிலாந்துக்கு 2 போட்டிகள் பாக்கி இருக்கிறது. இந்த இரண்டிலும் வென்றால்... எந்த பிரச்னையும் இல்லை. நேராக அரையிறுதி வாய்ப்பு உறுதி என்று சொல்லலாம்.

தோற்றால் எப்படி?
ஆனால், ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் கதை காலிதான். அப்போது 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெறும். மற்ற அணிகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளின் வெற்றி, தோல்வியை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டும். மேலும், எந்த அணிகளும் 10 புள்ளிகளை தாண்டக்கூடாது.

அதிக வெற்றி யாருக்கு?
இங்கிலாந்தின் 5 வெற்றிகளே அரையிறுதிக்குள் 4வது இடத்துக்கு போதும். ஒரு வேளை இலங்கை, இங்கிலாந்து 10 புள்ளிகளுடன் டைபிரேக்கர் என்று வந்தால், யார் அதிக வெற்றிகள் பெற்றாரோ அந்த அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும். இங்கிலாந்து அரையிறுதியில் நுழையும். பாகிஸ்தான், வங்கேசம், ஆகிய அணிகள் 9 புள்ளிகளுடன் நின்றுவிடும். இங்கிலாந்து அரையிறுதிக்கு செல்லும்.

தோல்வி வேண்டும்
ஒருவேளை பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளில் ஒரு அணி, எஞ்சிய அனைத்து போட்டிகளையும் ஜெயித்தால், இங்கிலாந்துக்கு பெரும் சிக்கலாக முடியும். சரி... வேறு என்ன வழி இருக்கிறது என்று பார்த்தால் அது போன்று நடக்குமா என்பது தெரிய வில்லை. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மீதமுள்ள 2 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும்.

மழை முடிவு செய்ய வேண்டும்
இரு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் மழையால் ரத்தாக வேண்டும். அப்படி ஒரு வேளை நடந்தால் 3 அணிகளுமே 8 புள்ளிகளுடன் சமமாக இருக்கும். அதிக வெற்றிகள் யார் என்று பார்க்கும் போது இங்கிலாந்துக்கு அரையிறுதிக்குள் நுழைய ஜெயம் கிடைக்கும். ஆனால்... இது நடக்க வேண்டுமானால்... மழை மனது வைக்கவேண்டும்.. நடக்குமா?


Click it and Unblock the Notifications