Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி ஆட்டமிழக்க இங்கிலாந்தின் வியூகம்.. யுத்தியை உடைப்பாரா கோலி.. ஸ்பெஷல் ஆயுதம் ரெடி

அடிலெயட் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் டி20 உலககோப்பையில் விளையாடுகிறது.

இந்திய அணி இதுவரை டி20 உலககோப்பையில் 3 முறை விளையாடி உள்ளது. இதில் இந்திய அணி 2 முறை வெற்றி பெற்று இருக்கிறது.

முக்கியமான வீரர்

முக்கியமான வீரர்

அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம். விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் கோலி 907 ரன்களை அடித்திருக்கிறார். இதில் சராசரி 75.88 ஆகும். இதனால் விராட் கோலி தனி ஆளாக போட்டியை தலைக்கீழாக மாற்றிவிடுவார்.

கோலியின் குறை

கோலியின் குறை

இதனால் விராட் கோலியை கட்டுப்படுத்த இங்கிலாந்து அணி ஒரு வியூகத்தை வகுத்துள்ளது. அதாவது விராட் கோலிக்கு பேட்டிங்கில் முன்பு ஒரு குறை இருந்தது. அதனை இதுவரை நடப்பு தொடரில் எந்த அணியும் பயன்படுத்தவில்லை. அதாவது, ஆப் சைடில் 4வது ஸ்டம்ப் லைனில் விராட் கோலிக்கு பந்துவீசினால். அதனை விராட் கோலி தொட்டு கேட்ச் ஆகி விடுவார்.

இங்கிலாந்து வியூகம்

இங்கிலாந்து வியூகம்

மேலும் அடிலெய்ட் மைதானம் பெரியது என்பதால், ஷாட் பாலை கொண்டு இந்திய வீரர்களுக்கு நெருக்கடி தரவும் இங்கிலாந்து முயற்சி செய்யும். அதன் பிறகு யாக்கர் பந்தையும் பேட்ஸ்மேன்கள் யூகிக்காத நேரத்தில் வீசவும் இங்கிலாந்து முயற்சி செய்யும். இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.

கோலி பயிற்சி

கோலி பயிற்சி

குறிப்பாக விராட் கோலி, ஷாட் பந்துகளை Pull Shot ஆடியும், ஆப் ஸ்டம்பு லைனுக்கு வரும் பந்தை Third man திசையில் அடித்தும் பயிற்சி செய்து வருகிறார். மேலும் எதிர்பாராத நேரத்தில் யாக்கர் பந்துகளை வீசுங்கள் என்று பவுலர்களிடம் கூறியும் விராட் கோலி பயிற்சி செய்து வருகிறார். அடிலெய்டில் பந்து அவ்வளவாக ஸ்விங் ஆகாது என்பதால் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.

Story first published: Wednesday, November 9, 2022, 15:37 [IST]
Other articles published on Nov 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+