
அதிக ஸ்கோர்
இந்தியா - இங்கிலாந்து தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஜோ ரூட் திகழ்கிறார். இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் 3 சதங்களை அவர் விளாசியுள்ளார். இந்த ஆண்டில் ஜோ ரூட் 11 டெஸ்ட்டில் ஆடி 1389 ரன் எடுத்துள்ளார். மொத்தம் 6 சதங்கள் ஆகும். இதன் மூலம் ஒரு ஆண்டில் டெஸ்ட்டில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் குக் 2015ம் ஆண்டில் 1364 ரன் அடித்திருந்தார்.

மைக்கேல் வாகன் விமர்சனம்
இப்படி ஜோ ரூட் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் போதும், அவரின் பேட்டிங்கையும், கேப்டன்சியையும் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார். அதில் அவர், ஜோ ரூட் சிறந்த கேப்டன் என்று அனைவரும் கொண்டாடுகிறார்கள். அப்படி அவர் சிறந்த கேப்டன் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றுத் தர வேண்டும் எனக்கூறினார்.

ஜோ ரூட்
இந்நிலையில் மைக்கேல் வாகனின் கருத்துக்கு, ஜோ ரூட் மறைமுக பதிலடி கொடுத்துள்ளார். இங்கிலாந்து கேப்டனாக இருந்தால், ஆஷஸ் கிரிக்கெட்டில் செயல்படுவதை வைத்துதான் கணக்கிடப்படுகிறார்கள். ஆனால் எனக்கு தற்போதைக்கு இந்திய அணியுடனான தொடரை வெல்வது தான் முக்கியம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான தொடர். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கவனிப்போம்.

பதிலடி கொடுத்த ரூட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை வெல்ல வேண்டும் என்பது தான் அனைத்து வீரர்களின் ஆசை. கேப்டன் அல்லது பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இங்கிலாந்து அணி கேப்டனாக என்னை பற்றி மற்றவர்கள் சிந்திப்பது சம்பந்தமே இல்லாதது. அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வது தான் எனது பணி. எனது கேப்டன்சி சிலருக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கு கவலையில்லை. பலரும், பல விதமான கருத்துக்களை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். என்னைப்பொறுத்தவரை, நான் பெருமைதான் படுகிறேன் என மைக்கேல் வாகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











