For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் வாழ்வில் மிகப்பெரும் சாதனையாக இது இருக்கும்... உறுதியுடன் களமிறங்கும் ஜோ ரூட்.. வெற்றி யாருக்கு?

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி குறித்த ஜோ ரூட்டின் பேச்சால் போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது,

இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நாளை அகமபதாபாத்தில் தொடங்குகிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டிக்காக வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று காட்டினால் என்னுடைய மிகப்பெரும் சாதனையாக அது இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

பின்னடைவு

பின்னடைவு

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளிலும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. குறிப்பாக இந்திய அணி ஸ்பின்னர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததால் அணியின் கேப்டன் ஜோ ரூட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சாதனை

சாதனை

இது குறித்து பேசியுள்ள ஜோ ரூட், சமீப நாட்களில் உள்நாட்டில் இந்திய அணியின் சாதனை வியக்கவைக்கிறது. எனவே 4வது டெஸ்டில் நாங்கள் ஏதேனும் சிறப்பாக செய்ய விரும்புகிறோம். அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தால், கேப்டனாக என் கிரிக்கெட் வாழ்வில் செய்யும் மிகப்பெரும் சாதனையாக இருக்கும். இலங்கை தொடர் மற்றும் இந்தியா தொடர் என 6 டெஸ்ட்களில் 4ல் வெற்றி பெற்ற பெருமை வரும் என தெரிவித்துள்ளார்.

பிளான்

பிளான்

3வது டெஸ்ட் போடியில் பிட்ச் குறித்து தவறாக கணித்து விட்டோம். இந்த முறை கவனமாக உள்ளோம். 4வது டெஸ்ட் பிட்ச்-ம் கடந்த போட்டியை போன்றே இருந்தால் அணியின் தேர்வு வேறு மாதிரியாக இருக்கும். ஸ்பின்னிங்கிற்கு சாதகமானால் டாம் பெஸ் கண்டிப்பாக அணியில் இருப்பார். அவர் என்னைவிட மிகவும் சிறப்பான வீரர். இது ஸ்பின் பிட்சாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அதற்காகவே பயிற்சி மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்திய அணிக்கு 4வது டெஸ்ட் கடைசி வாய்ப்பாகும். 4வது டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி அல்லது டிரா செய்தாக வேண்டும். ஒரு வேளை இந்திய அணி தோல்வியடைந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறும். அந்த வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்.

Story first published: Wednesday, March 3, 2021, 16:34 [IST]
Other articles published on Mar 3, 2021
English summary
England Skipper Joe Root's Plan for his Greatest acheivement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+