Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5வது டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. விடுமுறைக்கு சென்ற வீரருக்கு அழைப்பு - முழு விவரம்!

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5வது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.

கட்டாயத்தில் இங்கிலாந்து

கட்டாயத்தில் இங்கிலாந்து

கடைசியாக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் சொதப்பியது. எனினும் அசத்தல் கம்பேக் கொடுத்து 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணிலேயே படு மோசமான தோல்விகளை சந்தித்ததால் ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

5வது டெஸ்ட் போட்டி

5வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஐந்தாவது போட்டிக்கான அணியை இங்கிலாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4வது போட்டியில் சொந்த காரணங்களுக்காக விலகிய ஜோஸ் பட்லர், ஐந்தாவது போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஜேம்ஸ் ஆண்டர்சன்

4வது டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் காயமடைந்தனர். இருப்பினும், இவர்கள் களமிறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இதனை தவிர அணியில் பெரியளவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ப்ளேயிங் 11ல் மட்டுமே மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இங்கிலாந்து படை

இங்கிலாந்து படை

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொய்ன் அலி, ஹசீப் ஹமீத், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மாலன், க்ராய்க் ஓவர்டன், சாம் கரண், ஓலி போப், ஓலி ராபின்சன், கிரிஸ் வோக்ஸ், மார்க் உட்.

Story first published: Tuesday, September 7, 2021, 20:40 [IST]
Other articles published on Sep 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+