For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவோட மோத தயாராகும் இங்கிலாந்து அணி... பர்ஸ்ட் 2 போட்டிக்கான அணி அறிவிப்பு

லண்டன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் வரும் 5ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது.

இந்த போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து வீரர்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அணியில் பார்ஸ்டோ, சாம் குர்ரான், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பிட்னஸ் அடிப்படையில் ஓலி போப் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்ட் 5ம் தேதி துவக்கம்

முதல் டெஸ்ட் 5ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள்

முதல் 2 டெஸ்ட் போட்டிகள்

இந்நிலையில் தற்போது முதல் 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உள்ளிட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்களை மட்டும் தற்போது இரு அணிகளும் அறிவித்துள்ளன.

2வது போட்டியில் பங்கேற்காத பட்லர்

2வது போட்டியில் பங்கேற்காத பட்லர்

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், மொயின் அலி, ஆன்டர்சன், பிராட், பர்ன்ஸ், பட்லர், ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், வோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்றுவிட்டு ஜோஸ் பட்லர் இங்கிலாந்து திரும்பவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் 2வது போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்நிலையில் இந்த அணியில் பார்ஸ்டோ, சாம் குர்ரான், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பிட்னஸ் அடிப்படையில் ஓலி போப் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Story first published: Monday, January 25, 2021, 11:35 [IST]
Other articles published on Jan 25, 2021
English summary
Bairstow, Sam Curran, Mark Wood rested and Ollie Pope selection will be subject to fitness
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+