Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டெஸ்ட் போட்டி... இங்கிலாந்து அணி அறிவிச்சாச்சு... அடுத்து என்ன ஆட வேண்டியதுதான்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளன.

அடுத்ததாக பகலிரவு போட்டி உள்ளிட்ட இரு போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 2 டெஸ்ட்கள்

நடந்து முடிந்த 2 டெஸ்ட்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதையடுத்து அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி அறிவிப்பு

பகலிரவு போட்டி உள்ளிட்ட இரு டெஸ்ட் போட்டிகள் மோதேரா மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோ ரூட் தலைமையிலான இந்த அணியில் ஜேம்ஸ் ஆன்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோனி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ் உள்ளிட்டவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

மொயீன் அலி இல்லை

மொயீன் அலி இல்லை

மேலும் ஸ்டூவர்ட் பிரட், ரோரி பர்ன்ஸ், பென் போக்ஸ், சாக் க்ரோலி உள்ளிட்டவர்களும் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் மொயீன் அலி இடம்பெற மாட்டார் என்று கேப்டன் ஜோ ரூட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இறுதிப்போட்டிக்கு தீவிரம்

இறுதிப்போட்டிக்கு தீவிரம்

இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து, அடுத்த போட்டியில் மோசமாக தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது சில மாற்றங்களுடன் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெறுவதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறலாம்.

Story first published: Tuesday, February 16, 2021, 14:57 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+