Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ்… 4வது டெஸ்டுக்கான அணி அறிவிப்பு

லண்டன் : இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. பதினான்கு பேர் கொண்ட இந்த வீரர்கள் பட்டியலில் ஜேம்ஸ் வின்ஸ் அணியில் புதிதாக இடம் பிடித்துள்ளார்.

முதல் மூன்று போட்டிகளில் களத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்ட ஜேமி போர்டர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கவுன்டி தொடர்களில் பங்கேற்கும் வகையில் விலக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

England squad for fourth test announced - James Vince included.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்டில் களத்தில் ஆடிய பதினோரு வீரர்களில் யாரும் மாற்றப்படவில்லை. ஜேமி போர்டர் மட்டும் நீக்கப்பட்டு, அவர் இடத்திற்கு ஜேம்ஸ் வின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் வின்ஸ் கடைசியாக ஏப்ரல் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடினார். அதன் பின் இங்கிலாந்து உள்ளூர் கவுன்டி தொடர்களில் தான் ஆடி வந்தார். சமீபத்தில் நடந்த கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் 847 ரன்கள் எடுத்து, 56.46 ஆவரேஜ் வைத்து இருக்கிறார். மேலும், இந்த வாரத்தில் 74 மற்றும் 147 ரன்கள் எடுத்தார்.

இந்த அட்டகாசமான பார்மை கவனத்தில் கொண்ட இங்கிலாந்து தேர்வாளர்கள், காயம் ஏற்பட்டுள்ள ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்று வீரராக ஜேம்ஸ் வின்ஸை தேர்வு செய்துள்ளது. பேர்ஸ்டோ நான்காவது போட்டியில் ஆட முடியாத பட்சத்தில் ஜேம்ஸ் வின்ஸ் வாய்ப்பு பெறுவார்.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி :

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜிம்மி ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டுவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலஸ்டர் குக், சாம் கர்ரன், கீட்டன் ஜென்னிங்க்ஸ், ஒல்லி போப், அதில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ்

Story first published: Thursday, August 23, 2018, 19:39 [IST]
Other articles published on Aug 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+