
படுகாயம்
இஙகிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாரிஸ்டோ தான் விபத்தில் சிக்கினார். டி20 உலகக் கோப்பை அணியின் தொடக்க வீரராக ஜேசன் ராய் நீக்கப்பட்டார். இனி அந்த இடத்தில் பாரிஸ்டோ விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், பாரிஸ்டோ கோல்ஃப் விளையாடும் போது மைதானத்தில் உருண்டு கீழே விழுந்தார்.

எலும்பு முறிவு
இதில் பாரிஸ்டோவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் பாரிஸ்டோ 6 மாதத்திற்க எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாற்று வீரர் யார்?
அதில் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான பாரிஸ்டோ எதிர்பாராத விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். இதனால் அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். பாரிஸ்டோ முழு உடல் தகுதி பெற பிரார்த்தனைகள் என்று குறிப்பிட்டுள்ளது.

மனது உடைந்துவிட்டது
தனது காயம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாரிஸ்டோ, இங்கிலாந்து அணிக்காக ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலககோப்பை விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து மனம் உடைந்துவிட்டேன். இருப்பினும், என்னுடைய ஆதரவு என் அணி வீரர்களுக்கு எப்போதும் உள்ளது. மீண்டும் களத்துக்கு திரும்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











