Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்த 3 விக்கெட்டுகள் இழப்பு... அக்சர், சிராஜ் அதிரடி... இங்கிலாந்து திணறல்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதிப்போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்

இந்நிலையில் இன்றைய போட்டியில் பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து அணி அக்சர் படேலில் அடுத்தடுத்த ஓவர்களில் துவக்க வீரர்கள் டாம் சிப்ளி மற்றும் ஷாக் க்ராலி விக்கெட்டுகளை இழந்தது. மேலும் கேப்டன் ஜோ ரூட்டும் சிராஜ் பௌலிங்கில் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்துள்ளார்.

அஸ்வின் பௌலிங்கில் 11 முறை அவுட்

அஸ்வின் பௌலிங்கில் 11 முறை அவுட்

தற்போது ஜானி பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் விளையாடி வருகின்றனர். அஸ்வின் பௌலிங்கில் இதுவரை 11 முறை பென் ஸ்டோக்ஸ் அவுட்டாகியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் அவர் அஸ்வின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பார்ட்னர்ஷிப்பில் வீரர்கள்

பார்ட்னர்ஷிப்பில் வீரர்கள்

பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் நிதாமான ஆட்டத்தை தற்போது ஆடி வருகின்றனர். இருவரும் தலா 14 ரன்களை அடித்துள்ளனர். இருவரும் இணைந்து 20 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எடுத்துள்ளனர். 16 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்களை எடுத்துள்ளது.

Story first published: Thursday, March 4, 2021, 11:17 [IST]
Other articles published on Mar 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+