Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிச்சுருக்காங்க... அதுக்குள்ள டி20க்கு ரெடியா?

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்துள்ளது.

இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில் அதில் ஒரு போட்டி சென்னையிலும் அடுத்ததாக இரு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது.

England T20 squad for the series against India announced

தொடர்ந்து டி20 தொடரின் 5 போட்டிகள் அகமதாபாத்தின் புதிய மோதேரா மைதானத்தில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் இரு போட்டிகளை வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வாகும் என்பதால் அடுத்த போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டெஸ்ட் தொடரை தொடர்ந்து 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் இரு அணிகளுக்கிடையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான அணியை தற்போது இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இயான் மார்கன் தலைமையிலான இந்த அணியில் மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பார்ஸ்டோ, சாம் குர்ரான், டாம் குர்ரான் மற்றும் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 16 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Thursday, February 11, 2021, 19:42 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+