டி20 உலககோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு.. காயமடைந்த வீரருக்கு அணியில் இடம்
லண்டன்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான தற்காலிக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரால் பங்கேற்க இயலவில்லை.
இந்த சூழலில் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலககோப்பைக்கான இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் தலைமை தாங்குவார்.ஆர்ச்சர் தனது காயத்திலிருந்து மீண்டு வரும் செயலில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார்.

ஜனவரி 22 அன்று ஆரம்பிக்கும் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஆர்ச்சருக்கு பதிலாக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ப்ரைடன் கார்ஸ் இடம்பிடிப்பார்.அணியில் புதிதாக, வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் முதல் முறையாக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாக் கிராலி, டிசம்பர் 2023க்குப் பிறகு தற்போது முதல் முறையாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிக்குத் திரும்பி வந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை மற்றும் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து டி20 அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அஹமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், லியாம் டவ்சன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங், லூக் வூட். பிரைடன் கார்ஸ் (இலங்கை சுற்றுப்பயணத்திற்கு மட்டும்)
இலங்கை ஒருநாள் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அஹமது, டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாக் கிராலி, சாம் கர்ரன், லியாம் டவ்சன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், லூக் வூட்.


Click it and Unblock the Notifications