காயம் சரியாய்ருச்சு.. மீண்டும் அணிக்கு திரும்பினார் பென் ஸ்டோக்ஸ்!
Recommended Video

லண்டன்: இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட அணியில் முழங்கை காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.

மீண்டும் ஸ்டோக்ஸ்
கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பென் ஸ்டோக்சின் வருகை இங்கிலாந்து அணியை மேலும் பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இடம் பிடிக்கப்போவது யார்
தரவரிசையில் முதல் இடத்திலிருக்கும் இங்கிலாந்து அணி, இரண்டாவது இடத்தில இருக்கும் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி தொடரை இந்திய அணி வென்றால் ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதல் இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையுடன் இங்கிலாந்து
ஆஸ்திரேலியா அணியை 5-0 என்ற கணக்கில் வென்ற இங்கிலாந்து அணி, மிகுந்த நம்பிக்கையோடு இந்திய அணியை எதிர்கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

இதுதான் இங்கிலாந்து அணி
மோர்கன் (கேப்டன்) , மொயின் அலி , ஜோஸ் பட்லர் , ஜோ ரூட் , பேர்ஸ்டோவ் ,ஜாக் பால் ,டாம் கர்ரன் ,அலெக்ஸ் ஹேல்ஸ் , லியாம் பிளாங்கெட் , அடில் ரஷீத் , ஜேசன் ராய் , பென் ஸ்டோக்ஸ் , டேவிட் வில்லி மற்றும் மார்க் வுட் .


Click it and Unblock the Notifications