Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு பயம் காட்டிய ஆஃப்கானிஸ்தான்.. கடைசி கட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு.. போராடி தோல்வி!

மெல்பேர்ன்: இங்கிலாந்து அணியுடனான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி கடைசி வரை போராடி தோல்வி கண்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஃப்கான் அணி மோசமாக சொதப்பியது.

ஆஃப்கான் பேட்டிங்

ஆஃப்கான் பேட்டிங்

ஓப்பனிங் வீரர்கள் ஹஸ்ரத்துல்லா 7 ரன்களுக்கும், குர்பாஸ் 10 ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த இப்ராஹீம் - உஸ்மான் கானி ஆகியோர் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இப்ராஹீம் 32 ரன்களுக்கும், உஸ்மான் கானி 30 ரன்களுக்கும் வெளியேறினர். அவர்கள் அதிக ரன்கள் அடித்த போதும் ரன் ரேட் குறைவாகவே இருந்தது.

குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

இதன்பின்னர் வந்த அனைவருமே சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். குறிப்பாக முக்கிய வீரர்கள் நஜிபுல்லா 13, முகமது நபி (3), அஸ்மாதுல்லா (8) என ஏமாற்றினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 112 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து பதற்றம்

இங்கிலாந்து பதற்றம்

குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியது. ஓப்பனிங் வீரர்கள் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் சிறப்பாக விளையாடியதால் சுலபமாக வென்றுவிடுவார்கள் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் ஆஃப்கான் அணி அதற்கு வழிவிடவில்லை. பட்லர் (18), அலெக்ஸ் ஹேல்ஸ் (19), டேவிட் மாலன் (18 ), பென் ஸ்டோக்ஸ் (2) என வரிசையாக விக்கெட் எடுத்தது.

பரபரப்பான கட்டம்

பரபரப்பான கட்டம்

ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 97 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்ததால் ஆட்டம் பரபரப்பு கட்டத்திற்கு சென்றது. இன்னும் 2 விக்கெட்கள் விழுந்தால் ஆஃப்கானின் பக்கம் வெற்றி வாய்ப்பு வந்திருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் லியாம் லிவிங்ஸ்டோன் 29 ரன்களை அடித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். அந்த அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி கண்டது.

Story first published: Saturday, October 22, 2022, 20:47 [IST]
Other articles published on Oct 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+