For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருப்பம்.. பிட்ச் மீது புகார் வைக்காமல் பின்வாங்கும் இங்கிலாந்து அணி.. என்ன நடந்தது?- பின்னணி

அகமதாபாத்: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பிட்ச் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ள நிலையில் அகமதாபாத் பிட்ச் மீது புகார் வைக்காமல் இங்கிலாந்து அணி பின்வாங்கி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டிக்கு இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்திய அணி 2 போட்டியில் வென்றுள்ளது. கடைசி போட்டியை வெல்ல வேண்டிய அல்லது டிரா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

மூன்றாவது

மூன்றாவது

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் பலரும் அகமதாபாத் பிட்ச் மீது புகார் வைத்து வருகிறார்கள். இந்த பிட்ச்தான் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் கூட இந்த பிட்ச் குறித்து மறைமுகமாக பேசி இருந்தார்.

பிட்ச்

பிட்ச்

இந்த நிலையில் திடீர் என்று அகமதாபாத் பிட்ச் மீது புகார் வைக்காமல் இங்கிலாந்து அணி பின்வாங்கி உள்ளது. பிட்ச் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. மாறாக நான்காவது போட்டிக்கான பிட்ச் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

 இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இது தொடர்பாக இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், நாங்கள் பிட்ச் மீது புகார் வைக்க விரும்பவில்லை. ஸ்பின் பிட்சில் நாங்கள் நன்றாக ஆடி இருக்க வேண்டும். இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.

பேட்டிங்

பேட்டிங்

இதே பிட்சில்தான் இந்திய அணியும் பேட்டிங் செய்கிறது. இந்த பிட்சில் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய நாங்கள் எங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.அடுத்த போட்டியில் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

விமர்சனம்

விமர்சனம்

நடந்து முடிந்த போட்டி குறித்து விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் பிட்ச் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்கும் என்று நம்புகிறோம். நான்காவது டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு பிட்ச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று இங்கிலாந்து அணி கூறியுள்ளது.

Story first published: Sunday, February 28, 2021, 15:37 [IST]
Other articles published on Feb 28, 2021
English summary
England team doesn't want to complain about the Ahmedabad pitch after the 3rd test loss.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+