அதிகாரபூர்வ புகார் அளிக்க முடிவு.. சாட்டையை சுழற்றும் இங்கிலாந்து.. தீவிரமடையும் அகமதாபாத் சர்ச்சை
அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தோல்வி அடைந்த நிலையில் ஐசிசி அமைப்பிடம் இங்கிலாந்து அணி அதிகாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளது.
அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்திய அணி எளிதாக வீழ்த்தி உள்ளது.
இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

புகார்
இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தோல்வி அடைந்த நிலையில் ஐசிசி அமைப்பிடம் இங்கிலாந்து அணி அதிகாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளது. அகமதாபாத் பிட்ச் மோசமாக இருந்தது. பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக அமையவில்லை என்று இங்கிலாந்து அணி புகார் கொடுக்க உள்ளது.

விவரம்
இங்கிலாந்து அணியின் திட்டத்தின்படி அகமதாபாத் பிட்ச் மைதானத்தில் நிறைய களிமண் இருந்தது. பிட்சில் பெரிய அளவில் வெடிப்புகள் இருந்தது. கொஞ்சம் கூட புற்கள் இல்லை. இது முறையான பேட்டிங் செய்ய கூடிய பிட்ச் இல்லை.

பிட்ச் இல்லை
இதனால்தான் இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் போட்டி முடிந்தது. இதனால் அகமதாபாத் பிட்ச் குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணி புகார் கொடுக்க உள்ளது. இந்த பிட்ச் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணி புகார் கொடுக்க உள்ளது.

மெயில்
இது தொடர்பாக அதிகார்பூர்வமாக இங்கிலாந்து அணி நிர்வாகம் மெயில் அனுப்ப உள்ளது. டெஸ்ட் உலகக் கோப்பைக்கு இடையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதனால் அதிகாரபூர்வமாக புகார் அளித்து இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications