For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன்சிக்கே சிக்கல்.. இந்திய அணியால் இங்கிலாந்துக்குள் பிளவு.. பாவம் ரூட்டுக்கு போடப்பட்ட கேட்

அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோசமாக ஆடி வருவதால் கேப்டன் ஜோ ரூட்டின் பதவி சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டி முழுக்க ஸ்பின் பவுலர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். வெறும் இரண்டு நாளில் மொத்த ஆட்டமும் முடிவிற்கு வந்து இருக்கிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோசமாக ஆடி வருவதால் கேப்டன் ஜோ ரூட்டின் பதவி சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. ரூட் எடுத்த முடிவுகள், அவர் தேர்வு செய்யும் அணி எல்லாம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணி நிர்வாகம் இவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை என்கிறார்கள்.

சிக்கல்

சிக்கல்

இங்கிலாந்து அணிக்குள் ரொட்டேஷன் பாலிசியை கொண்டு வந்தது இவர்தான். கொரோனா காரணமாக வீரர்களை மாற்றி மாற்றி இறங்க வைத்தது ரூட்தான். இந்தியாவிற்கு எதிராக வலிமை இல்லாத அணியை ரூட்தான் தேர்வு செய்தது.

வருத்தம்

வருத்தம்

பிரைஸ்டோ, சாம் கரன் போன்ற வீரர்களை தொடக்கத்திலேயே அணியில் எடுக்காமல் ரூட்தான் சொதப்பினார். மொயின் அலியையும் இவர் சரியாக பயன்படுத்தவில்லை. அதேபோல் ரூட் தற்போது தேர்வு செய்த பிளேயிங் லெவனும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தவறான முடிவு

தவறான முடிவு

கடந்த போட்டியில் ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இவர் இறங்கியது இங்கிலாந்து அணி நிர்வாகத்தை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.டாஸ் வென்றும் கூட போட்டியில் வெல்ல முடியவில்லை என்பதால் ரூட் மீது கோபத்தில் உள்ளனர். அதோடு இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் ரூட்டுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

 விமர்சனம்

விமர்சனம்

ரூட்டின் கேப்டன்சி சரியில்லை என்று கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். தற்போது டெஸ்ட் உலகக் கோப்பையில் இருந்தும் இங்கிலாந்து அணி வெளியேறிவிட்டது. இதனால் ரூட்டை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Story first published: Saturday, February 27, 2021, 17:06 [IST]
Other articles published on Feb 27, 2021
English summary
England team management is not happy with Joe Root captaincy against India in test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+