Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி.. இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்..அதிரடி வீரருக்கு வாய்ப்பு

அடிலெய்ட் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

குரூப் 1 இல் இடம்பெற்ற இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி, சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்துடன் தோல்வியை தழுவியது.

எனினும், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்திய இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

அனுபவ வீரர்

அனுபவ வீரர்

இந்த நிலையில் , அரையிறுதி ஆட்டத்திற்கு முன்பு இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் காயம் காரணமாக விலகி உள்ளார் இது இங்கிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் நம்பர் 3வது வீரராக களமிறங்கும் டேவிட் மாலன், சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1748 ரன்களை அடித்துள்ளார்.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

இதில் சராசரி மட்டும் 38 ஆகும். சர்வதேச டி20 தரவரிசையில் 6வது இடத்தில் டேவிட் மாலன் இருக்கிறார். தற்போது காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டேவிட் மாலனுக்கு பதிலாக பேட்ஸ்மேனை சேர்க்கலாமா, ஆல் ரவுண்டரை சேர்க்கலாமா என்ற சந்தேகத்தில் கேப்டன் பட்லர் இருக்கிறார்.

பில் சால்ட்

பில் சால்ட்

இங்கிலாந்து அணியில் அதிரடி இளம் வீரர் பில் சால்ட், தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 164 என்ற அளவில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள பில் சால்ட்- ஐ தொடக்க வீரராக பயன்படுத்தலாம். இல்லையெனில் நடுவரிசையில் களமிறக்கலாம். இதே போன்று இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லியை ஜாஸ் பட்லர் பயன்படுத்தலாம்.

டேவிட் வில்லி

டேவிட் வில்லி

பவர்பிளேவில் டேவிட் வில்லியின் பந்துவீச்சு இந்திய அணிக்கு நெருக்கடியை தரலாம். குறிப்பாக ரோகித், தொடக்க வீரருக்கு எதிராக சொதப்புவார் என்பதால், டேவிட் வில்லி நல்ல வாய்ப்பாக இருப்பார். இல்லையெனில் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பந்துவீச கூடிய கிறிஸ் ஜார்டனை சேர்க்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, November 8, 2022, 14:41 [IST]
Other articles published on Nov 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+