Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணிக்கு டாக்டர் பட்டம் அளிக்க இங்கிலாந்து பல்கலை கழகம் முடிவு

Dhoni
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சிறந்த செயல்பாட்டை பாராட்டி, இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைக் கழகம், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர் பல்கலை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட் அணியை கேப்டன் என்ற முறையில் டோணி சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கும் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் டோணி ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையி்ல் அவரது சிறப்பான செயல்பாட்டை பாராட்டி அந்த கெளரவ பட்டத்தை வழங்க முடிவு செய்துள்ளோம்," என்று கூறப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை டாக்டர் பட்டம் வாங்க உள்ள கேப்டன் டோணி கூறுகையில், இந்த பட்டம் எனக்கு மகிழ்ச்சியும், ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. இந்திய அணியினருக்கு அளிக்கப்பட்டதாக கருதுகிறேன், என்றார்.

முன்னதாக, லீசெஸ்டர் பல்கலைக் கழகம் இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த 2006ம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. மேலும், மெட்ரோபாலிகன் பல்கலை கழகம், இந்தி நடிகைகள் சப்னா ஆஷ்மி, ஷில்பா ஷெட்டி, சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

டாக்டர் பட்டம் வாங்க செல்லும் டோணியை, லலசெஸ்டர் பல்கலை கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் குழுவினர் சந்திக்க பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:49 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+