Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs AUS - இன்று முதல் டி20 போட்டி எந்த சேனலில் பார்ப்பது? இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் அறிமுகம்

மும்பை : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய பில் சால்ட், இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார்.

eng vs aus england vs australia cricket


இதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் இடம் பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலிய அணியிலும் பாட் கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஜாக் பிரேசர் ஆகியோர் களமிறங்க கூடும். ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார்.

ஆனால் அவர் 0,16,0 ஆகிய ரன்களை தான் அடித்து இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா தொடரில் அவர் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஸ், ஜேக் பிரேசருக்கு எந்த ஒரு அழுத்தமும் கிடையாது. அவர் திறமை வாய்ந்த வீரர் .ஜேக் பிரஷருக்கு நல்ல ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது.

அவர் அணிக்குள் என்ன விதமான விஷயங்களைக் கொண்டு வருவார் என்பதை நினைக்கும் பொது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இளம் வீரராக இருக்கிறார். நிச்சயம் சர்வதேச கிரிக்கெட்டில் பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்வார். எங்கள் அணியின் சார்பாக நாங்கள் ஜேக் பிரஷருக்கு முழு ஆதரவு கொடுப்போம். அவருடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது.

சர்வதேச கிரிக்கெட்டிற்கு தகுந்த நபராக ஜேக் பிரேசர் இருக்கிறார் என்று மிட்செல் மார்ஸ் கூறியுள்ளார். இங்கிலாந்து அணி தங்களுடைய பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இதில் ஜார்டன் காக்ஸ்,ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜெமி ஓவர்டன் ஆகியோர் டி20 போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்குகிறார்கள். இந்தப் போட்டியில் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியை தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். ஆன்லைனில் பார்க்க வேண்டுமென்றால் sony லிவ் அல்லது ஃபேன் கோடு ஆப்புகளில் பார்க்கலாம். இந்த சேனல்களை எல்லாம் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் ஜியோ டிவி ஆப்பில் சென்று சோனி தொலைக்காட்சிகளை வைத்து இலவசமாக பார்க்க முடியும்.

Story first published: Wednesday, September 11, 2024, 20:48 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+