Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 'டிரா'!

ராஜ்கோட்: இங்கிலாந்து அணியுடனான இந்திய அணியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியின் ரூட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் மூவரும் சதமடித்திருந்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணி 488 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் முரளி விஜய், புஜாரா சதம் விளாசினர்.

England vs India: 1st Test Match ends in a draw

49 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடியது இங்கிலாந்து அணி. 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்த அந்த அணி டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் குக் சதமடித்தார்.

பின்னர் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஆனால் கோஹ்லியும் ஜடேஜாவும் சமாளித்து ஆடினர்.

இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதனால் வெற்றி தோல்வியின்றி சமனில் இந்த முதல் டெஸ்ட் முடிவடைந்தது.

இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 17-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

Story first published: Sunday, November 13, 2016, 17:05 [IST]
Other articles published on Nov 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+