Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் வெலன்.. தொடரை வெல்லுமா இந்தியா?

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்த நிலையில், தற்போது டி20 போட்டி நடைபெறுகிறது.

Recommended Video

IND vs ENG 2nd T20: Playing 11-ல் Changes இருக்கும்

இதில் முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இங்கிலாந்துக்கு கருதப்படுகிறது.

இதனையடுத்து, இந்திய அணிக்கு விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் திரும்பியுள்ளதால் பிளேயிங் லெவனில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல் 3 வீரர்கள்

முதல் 3 வீரர்கள்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பிளேயிங் லெவனில் திரும்பியுள்ளதால், தொடக்க வீரர் இஷான் கிஷன் வெளியே செல்ல அதிக வாய்ப்புள்ளது. நம்பர் 3 வது வீரராக விராட் கோலி திரும்பியுள்ளதால், அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய தீபக் ஹூடாவை ஓபனிங்கில் களமிறக்கவும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடுவரிசை

நடுவரிசை

நடுவரிசையில் சூர்யகுமார் குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஜடேஜாவும் பிளேயிங் லெவனில் திரும்பியுள்ளதால், அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகமே.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

இதே போன்று சாஹல் பிளேயிங் லெவனில் முக்கியம் என்பதால் 2 வேகபந்துவீச்சாளருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். அதில் ஒன்று புவனேஸ்வர்குமார் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார். இதனால் எஞ்சியுள்ள 1 இடத்தில் ஹர்சல் பட்டேலா, பும்ராவா என்ற குழப்பம் ஏற்பட, நிச்சயம் பும்ராவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, தீபக் ஹூடா, 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, ரிஷப் பண்ட், 7, தினேஷ் கார்த்திக், 8,ஜடேஜா, 9, புவனேஸ்வர் குமார், 10, பும்ரா, 11, சாஹல்

Story first published: Friday, July 8, 2022, 20:07 [IST]
Other articles published on Jul 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+