100 ரன்கள் வித்தியாசம்.. இந்தியாவை நொறுக்கிய இங்கிலாந்து அணி.. பதிலடி கொடுத்த டோப்லி
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.
Recommended Video
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது .
இதனை அடுத்து வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இங்கிலாந்து அணி நேற்று நடைபெற்ற போட்டியில் களம் இறங்கியது.

தொடக்க வீரர்கள்
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த ஆட்டத்தை போல் இல்லாமல் இம்முறை ஆடுகளம் ஒரு அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது
இங்கிலாந்தின் ஜேசன் ராய் மற்றும் பாரிஸ்டோ ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் பும்ரா முகமது ஷமி ஓவரை விக்கெட் விழாமல் கடக்க, ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியாவை பந்து வீச அழைத்தார் .

தடுமாறிய இங்கிலாந்து
இதனை அடுத்து ஹர்திக் பாண்டியா அவரது முதல் ஓவரில் விக்கெட்டை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 41 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ராய் 23 ரன்களில் ஆட்டமிழக்க சாஹல் பந்துவீச்சில் பாரிஸ்டோ 38 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று ஜோ ரூட் 11 எண்களிலும் பென் ஸ்டோக்ஸ் 21 எண்களிலும் சாஹல் பந்துவீச்சில் வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பட்லர் ஷமி பந்து வீச்சில் 4 ரன்களில் போல்ட் ஆனார்.

கௌரவமான இலக்கு
லிவிங் ஸ்டோன் ஒரு அளவுக்கு போராடி 33 ரன்கள் சேர்த்து வெளியேற இங்கிலாந்து அணி 148 ரன்கள் சேர்ப்பதற்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மொயில் அலி, டேவிட் வில் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டு கௌரவமான இலக்கை எட்டியது. இதனால் இங்கிலாந்து அணி 49 ஓவர் முடிவில் 246 ரன்கள் எடுத்தது.

ரோகித் டக் அவுட்
247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆக, ஷிகர் தவான் 9 ரன்களில் வெளியேறினார். விராட் கோலி தொடக்கத்தில் பொறுமையாக விளையாடி மூன்று பவுண்டரிகளை விளாசினார்.இதனால் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 16 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

திணறிய இந்தியா
பார்மில் இருந்த சூரியகுமார் யாதவும் நிதானமாக விளையாடி 27 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 73 ரன்கள் 5 விக்கெட் இழந்து தோல்வியை நோக்கி சென்றது. ஹர்திக் பாண்டியா ஜடேஜா ஜோடி போராடி தலா 29 ரன்கள் அடிக்க முகமது ஷமி 23 ரகளை சேர்த்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழக்க இந்திய அணி 146 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

தோல்விக்கான காரணம்
இங்கிலாந்து வீரர் டாப்லீ 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு பதிலடி தந்தார் இந்தியா விளையாடும் போது ஆடுகளம் அவ்வளவு ஆக பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படவில்லை. எனினும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் குறிப்பாக ரோகித் சர்மா இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறி வருகிறார். அவர் டக் அவுட் ஆனதும் தவான் நிலைத்து நின்று ஆடாமல் தனது விக்கெட்டை பறி கொடுத்ததும் தோல்விக்கு காரணமாக அமைந்தது . இதேபோன்று ரிஷப்பை நான்காவது வீரராக களம் இறக்கியது அணியின் பேட்டிங் வரிசையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications