இது ஜார்வோ 2.0 - இந்தியா, இங்கிலாந்து டெஸ்டில் சம்பவம்.. பதறி போய் நடவடிக்கை எடுத்த போலீஸ்
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடும் போது நேற்று ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதம் விளாசினார். அவருக்கு பக்க பலமாக நின்ற ஜடேஜா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
இந்திய அணி 338 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஜார்வோ
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற கொஞ்சம் காமெடி கொஞ்சம் சீரியசான சம்பவம் போல் தற்போது மீண்டும் நடைபெற்றுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஜார்வோ 69 ஐ மறந்து இருக்க முடியாது. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரின் போது, இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு களத்துக்கு பந்துவீச வந்தார்.

இந்தியாவின் 12வது வீரர்
இதே போன்று நான் தான் இந்திய அணியின் 12வது வீரர். நான் பேட்டிங் செய்ய வருகிறேன் என்று ஹெல்மெட் எல்லம் அணிந்து கொண்ட காமெடி செய்தார். அவரை போலீசார் குண்டக் கட்டாக தூக்கி சென்று கைது செய்து, பிறகு விடுதலை செய்தனர்.

அத்துமீறிய ரசிகர்
இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அதே மாதிரி நிகழ்ந்துள்ளது. நேற்று ஸ்ரேயாஸ் ஐயர் அவுட் ஆனதும், திடீரென்று மைதானத்துக்குள் ரசிகர் ஒருவர் வெள்ளை நிற ஜெர்சியை அணிந்து ஃபில்டிங் செய்கிறேன் என்று கூறினார். இதனையடுத்து பதறி போன பாதுகாவலர்கள், மைதானத்திற்குள் ஓடி வந்தனர்.
பாதுகாப்பு குறைபாடு
இதனையடுத்து அவரை வெளியே அழைத்து சென்றனர். இது நகைச்சுவைக்காக செய்யப்பட்டாலும், இது பாதுகாப்பு குறைபாடாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இது போன்ற சம்பவம் கடைசியாக எப்போது நடந்தது என்று யோசித்தால், உங்களுக்கு நினைவில் இருக்காது. ஆனால் வெளிநாட்டில் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications