For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது இளைஞர்களின் ஹீரோவாக திகழ்கிறார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாத தினேஷ் கார்த்திக், 3 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி திரும்பினார்.

ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியின் தனது இடத்தை கார்த்திக் ரிசர்வ் செய்து கொண்டார்.

ஃபினிஷர் கார்த்திக்

ஃபினிஷர் கார்த்திக்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் இக்கட்டான நிலையில் கார்த்திக் 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரிலும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். தினேஷ் கார்த்திக்கிற்கு 36 வயது தான் ஆகிறது, பினிஷர் ரோலில் சிறப்பாக செயல்படுகிறார்.

நடுவரிசையில் அனுபவம்

நடுவரிசையில் அனுபவம்

இந்த காரணத்துக்காக தான் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்காக தேர்வுக்குழு தயார் செய்தது. தற்போது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று இந்திய ஒருநாள் அணியிலும் இதுவரை நம்பர் 4 மற்றும் நம்பர் 5க்கு சரியான வீரர் இன்னும் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

இதனால் தினேஷ் கார்த்திக் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது தினேஷ் கார்த்திக்கின் உத்வேகத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தான் அனுபவமும், பினிஷரும் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ஆனால் தேர்வுக்குழுவினரோ, கையில் வெண்ணெயை வைத்து கொண்டு அந்த இடத்துக்கு வேறு நபர்களை தேடி வருகின்றனர். அனுபவ வீரர் ஷிகர் தவானை தொடக்க வீரராக தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தது நல்ல முடிவு.தற்போதுள்ள அணியை வைத்து பிளேயிங் லெவனை பார்த்தால், ரோகித், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார்,ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா,ஜடேஜா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, சஹால் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

Story first published: Friday, July 1, 2022, 21:47 [IST]
Other articles published on Jul 1, 2022
English summary
England vs India odi series – No chance for Dinesh karthik by selectors தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+