அடுத்தடுத்து சொதப்பும் கோஹ்லி.. பரவாயில்லை என்கிறார் கவாஸ்கர்!
மும்பை: விராத் கோஹ்லி இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து சொதப்பி வருவதால் ரசிகர்கள் கடும் கடுப்படைந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள கோஹ்லி முதல் டெஸ்ட்டிலும் சரியாக ஆடவில்லை. 2வது டெஸ்ட்டிலும் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதுவரை அவர் ஆடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் அவர் மொத்தமே 34 ரன்களைத்தான் எடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

பேசியபடி ஆடவில்லை
எனக்கு எப்படி ஆட வேண்டும் என்று யாரும் சொல்லித் தரத் தேவையில்லை என்று கோஹ்லி ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் இப்படித்தான் ஆடுவதா என்று எல்லோரும் கேட்கும்படியாக மாறியுள்ளது அவரது ஆட்டம்.

சீக்கிரமே அவுட்
ஒவ்வொரு முறையும் அவர் சீக்கிரமே அவுட் ஆகி விடுகிறார். அவரது பாணி ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை.

34 ரன்கள் மட்டுமே
இதுவரை அவர் ஆடியுள்ள நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமே 34 ரன்களைத்தான் அவர் எடுத்துள்ளார்.

இதெல்லாம் "ஜகஜம்"தான்...
இப்படிப்பட்ட பிட்ச்சில் ஆடுவது சில பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருக்கத்தான் செய்யும். கோஹ்லிக்கு அது நடந்துள்ளது. இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை.

1, 8, 25, 0
விராத் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டியில் முறையே 1, 8 என ரன்கள் எடுத்தார். 2வது போட்டியில் 25 மற்றும் டக் அவுட் ஆகியுள்ளார்.

தரமான வீரர்தான்
கோஹ்லி தரமான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு அதிர்ஷ்டம் திரும்பவில்லை. திரும்பி விட்டால் அவர் பிரமதாமாக ஆடுவார் என்றார்.

காதலியுடன் சந்தோஷமாக
விளையாட்டில்தான் இப்படிச் சொதப்புகிறாரே தவிர இங்கிலாந்தில் வந்து இவருக்காகவே கேம்ப் அடித்திருக்கும் காதலி அனுஷ்கா சர்மாவுடன் படு ஹேப்பியாகத்தான் இருக்கிறாராம் கோஹ்லி.


Click it and Unblock the Notifications