இந்தியாவை மனதில் வைத்து.. இங்கிலாந்து vs நியூசி.. இன்று முதல் போட்டி - சம்பவம் இருக்கு
லண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன்.2) தொடங்குகிறது. இத்தொடர், நியூசிலாந்து அணிக்கு ஏன் மிகவும் தெரியுமா?
நியூசிலாந்துக்கு மட்டும் ஏன் இந்த கொடுப்பினை கிடைத்தது என்று தெரியவில்லை. ஆம்!. இந்தியாவுக்கு எதிரான டஃப் போட்டிக்கு முன்பு, அட்டகாசமான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது.
இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இடையேயான இந்த முதல் டெஸ்ட் போட்டி, லண்டனில் இன்று தொடங்குகிறது. உள்ளூர் நேரப்படி காலை 11 அணிக்கும், இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கும் இப்போட்டி தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக, நியூசிலாந்து ஒருபடி கூடுதலாகவே ப்ரிப்பேர் செய்து வருகிறது.

நியூஸி., ஸ்டிராடஜி
ஏனெனில், இவ்விரு டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மோதுகிறது. முதன் முறை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என்பதால், இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக, தனது அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட்-க்கு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு கொடுத்துள்ளது நியூசிலாந்து. இந்தியாவுக்கு எதிராக அவரை ஃபிரெஷ்ஷாக களம் இறக்க வேண்டும் என்பதே அவர்கள் ஸ்டிராடஜி. இதனை வெளிப்படையாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

சிறந்த முன் அனுபவம்
நியூசிலாந்தை பொறுத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை விட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முக்கியம் என்று கருதுகின்றனர். ஆகையால் இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தால் கூட பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் போல. எனினும், அவர்களது கவனம் அனைத்தும், இங்கிலாந்து கண்டிஷனுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது தான். இதனை முழுமையாக செய்துவிட்டாலே, வெற்றி பாதி உறுதி. அதுமட்டுமின்றி, இங்கிலாந்தின் மேகமூட்ட கண்டிஷன்களுக்கு ஏற்ப மேற்கொள்ளும் பவுலிங் மாற்றங்களையும் நியூஸி., ஓரளவுக்கு கணித்து வைத்துவிடும். ஒட்டுமொத்தமாக இந்த சீரிஸ், நியூசிலாந்துக்கு ஒரு சிறந்த முன் அனுபவமாக இருக்கும்.

பிளேயிங் லெவன்
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, ஜோ ரூட் தலைமையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர். சொந்த மண். சொந்த ரசிகர்கள். சொந்த கண்டிஷன்ஸ் என்று முழுக்க முழுக்க பாசிட்டிவிட்டிகளை அறுவடை செய்து வைத்திருக்கிறது. இங்கிலாந்து அணியில், ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லே, ஜாக் கிராலி, ஜோ ரூட், ஓலே போப், டான் லாரன்ஸ், ஜேம்ஸ் பிரேசி, கிரேக் ஓவர்டன் / ஓலே ராபின்சன், மார்க் வூட் / ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

பிளேயிங் லெவன்
நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பிஜே வாட்லிங், கோலின் டி கிராண்ட்ஹோம் / டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர் / மாட் ஹென்றி, கைல் ஜேமீசன், டிம் சவுதி, நீல் வாக்னர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. (யாரை தேடுறீங்க?.. டிரெண்ட் போல்ட்டை-யா? அவரைத் தான் பதுக்கிட்டாங்களே)


Click it and Unblock the Notifications