Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி நேரம், சேனல், லைவ் ஸ்ட்ரீமிங்கில் இலவசமாக பார்ப்பது எப்படி?

அஹமதாபாத் : 2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த முறை பத்து நாடுகள் இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளன. இந்தியாவில் உள்ள பத்து மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும்.

England vs New Zealand World cup 1st match venue, timing, telecast and live streaming details

முதல் போட்டி மற்றும் இறுதிப் போட்டி உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறும்.

இந்திய அணி தனது அக்டோபர் 8 அன்று தான் தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆட உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி நடக்க உள்ள 2023 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் ஏன் இந்தியாவை ஆட வைக்காமல், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை ஆட வைக்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது.

கடந்த 2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் தான் மோதின. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. எனவே, அதே அணிகள் தான் அடுத்த உலகக்கோப்பை தொடரை தொடங்க வேண்டும் என முடிவு செய்த ஐசிசி அந்த இரண்டு அணிகளை முதல் போட்டியில் ஆட வைக்க உள்ளது.

முதல் போட்டி தேதி : அக்டோபர் 5 ஆம் தேதி அஹ்மதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும்.

போட்டி துவங்கும் நேரம் : மதியம் 2 மணிக்கு போட்டி துவங்கும். 1.30 மணிக்கு டாஸ் போடப்படும்.

இங்கிலாந்து - நியூசிலாந்து உலகக்கோப்பை போட்டியை எந்த சேனலில் பார்க்கலாம்? :

ஐசிசி உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வைத்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களில் இங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் போட்டியை காணலாம்.

முதல் உலகக்கோப்பை போட்டி லைவ் ஸ்ட்ரீமிங்கில் இலவசமா?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி (app) மற்றும் இணையதளத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து ஆடும் முதல் போட்டியை இலவசமாக பார்க்கலாம். ஹாட்ஸ்டார் சந்தா செலுத்தாதவர்களும் போட்டியை இலவசமாக பார்க்கலாம்.

Story first published: Wednesday, October 4, 2023, 8:48 [IST]
Other articles published on Oct 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+