For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷோயப் மாலிக்.. பந்தை அடிக்க சொன்னா எதை அடிக்கிறீங்க? விழுந்து விழுந்து சிரித்த இங்கி. வீரர்கள்!

ட்ரென்ட் பிரிட்ஜ் : இங்கிலாந்து நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது பாகிஸ்தான் அணி.

இரு அணிகளுக்கு இடையே ஆன நான்காவது போட்டியில் ஷோயப் மாலிக் அவுட் ஆன விதத்தை பார்த்து இங்கிலாந்து வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் விழுந்து, விழுந்து சிரித்து வருகிறார்கள். அப்படி என்ன தான் செய்தார்.. எப்படி அவுட் ஆனார்?

ரன் குவிக்கும் வேகம்

ரன் குவிக்கும் வேகம்

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. கடைசி பத்து ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆடி வந்தார் பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் ஷோயப் மாலிக்.

கிரீஸுக்கு உள்ளே..

கிரீஸுக்கு உள்ளே..

47வது ஓவரில் இங்கிலாந்து அணியின் மார்க் வுட் வீசிய பந்தை லேட் கட் அடிக்க முடிவு செய்து காலை கிரீஸுக்கு உள்ளே தள்ளி வைத்தார். பின் பந்தை கடைசி வரை உள்ளே விட்டு, ஸ்டம்ப் அருகே பந்து வந்தவுடன் பந்தை அடிக்க முடிவு செய்தார்.

என்ன நடந்தது?

ஆனால், காலை தள்ளி வைக்கிறேன் என ஒரேடியாக ஸ்டம்ப்புக்கு மிக அருகே வைத்ததால், பந்தை அடிக்க வரும்போது பேட் மூன்று ஸ்டம்ப்புகளையும் தட்டிவிட்டது. முதலில் இந்த விக்கெட்டை பார்த்த போது, பௌல்டு அவுட் போல இருந்தது.

இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்து வீரர்கள்

ஆனால், பின்னர் ஹிட் விக்கெட் என தெரிந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் சிரித்துக் கொண்டே விக்கெட்டை கொண்டாடினார். அதன்பின், இங்கிலாந்து வீரர்கள் இதை சொல்லி, சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தனர்.

நூற்றாண்டின் ஹிட் விக்கெட்

மூத்த அனுபவ வீரரான ஷோயப் மாலிக், மிகவும் மோசமான முறையில் ஹிட் அவுட் ஆனதை பார்த்து ட்விட்டர்வாசிகள் கிண்டல் அடிக்கத் துவங்கினர். ஒருவர் இந்த நூற்றாண்டின் ஹிட் விக்கெட் இது.. என கூறி இருக்கிறார்.

கிண்டல்

மாலிக் அவுட் ஆன விதத்தை பார்த்து இங்கிலாந்து வீரர்கள் கிண்டல் அடிக்கிறார்கள் என படத்தை போட்டுக் காட்டி சிரிப்பு மூட்டுகிறார் இந்த ரசிகர்.

இவங்களால தான் முடியும்

ஒருவர், இந்த பாகிஸ்தான் அணியால் தான் இப்படி காமெடி விக்கெட்களை உருவாக்க முடியும் என அவர்களை நையாண்டி செய்து சீண்டியுள்ளார். உண்மையில், நிறைய காமெடி ரன் அவுட்கள் ஆனது பாகிஸ்தான் அணியினர் தான். யூ-ட்யூபில் அவர்கள் வீடியோ தான் கலக்கலாக வலம் வருகிறது.

டென்னிஸ்

"ஏங்க.. அவரு டென்னிஸ் ஆடுறாரு.." என்கிறார் இன்னொருவர்.

Story first published: Saturday, May 18, 2019, 13:48 [IST]
Other articles published on May 18, 2019
English summary
England vs Pakistan fourth ODI : Shoaib Malik hit wicket look funny and Twitter laughs at it.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+