Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs SL: 94 வருட டெஸ்ட் சரித்திரத்தில் இடம் பிடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்

மான்செஸ்டர்: இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் நிலையில் 94 வருட இங்கிலாந்து டெஸ்ட் சாதனை ஒன்றை முறியடித்து வியக்க வைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸில் 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஆறாம் வரிசையில் இறங்கிய விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 148 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார்.

England Sri Lanka Jamie Smith


தனது நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஜேமி ஸ்மித், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தினார். அது மட்டுமின்றி 94 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்தார். 1930 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் லெஸ் அமெஸ் 24 வயது 63 நாளில் முதல் சதத்தை அடித்து இருந்தார்.

அதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக இளம் வயதில் டெஸ்ட் சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார். தற்போது அவரது சாதனையை முறியடித்து இருக்கிறார் ஜேமி ஸ்மித். ஸ்மித்தின் வயது தற்போது 24 வயது 42 நாள் ஆகிறது. 21 நாள் வித்தியாசத்தில் 94 வருட விக்கெட் கீப்பர் சாதனையை முறியடித்து இருக்கிறார் ஜேமி ஸ்மித்.

பின்னர் முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 358 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி மூன்றாவது நாளின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி தற்போது 82 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.

Story first published: Saturday, August 24, 2024, 15:03 [IST]
Other articles published on Aug 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+