Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டே மாதத்தில் கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய கவுரவத்தை பெற்ற இளம் இங்கிலாந்து வீரர்.. சாதனை விவரம்

லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கஸ் அட்கின்சன் தனது முதல் டெஸ்ட் சதம் அடித்தார். அதன் மூலம் அவர் கிரிக்கெட் உலகில் கவுரவமான சாதனைகளில் ஒன்றை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. மூத்த வீரர் ஜோ ரூட் அபாரமாக ஆடி தனது 33வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அவர் ஆட்டமிழந்த பின் எட்டாம் வரிசையில் இறங்கிய கஸ் அட்கின்சன் அதிரடி ஆட்டம் ஆடி 115 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இதுவே இவரது முதல் 50+ ஸ்கோர் ஆகும்.

england sri lanka

கடந்த மாதம் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தார் கஸ் அட்கின்சன். இந்த நிலையில், அவர் கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் கவுரவ பெயர் பலகையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு பிரிவிலும் இடம் பெற்று சாதனை படைத்து இருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரே மாதத்தில் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.

கடந்த மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கஸ் அட்கின்சன் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அந்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

அந்த மைதானத்தில் குறிப்பிட்ட சாதனைகளை செய்யும் வீரர்களின் பெயர்கள் லார்ட்ஸ் மைதான பலகையில் பொறிக்கப்படும். கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் லார்ட்ஸ் மைதான பலகையில் தங்களின் பெயர் இடம் பெறுவதை கிரிக்கெட் வீரர்கள் உயரிய கவுரவமாக கருதுகிறார்கள்.

அந்த வகையில் கடந்த மாதம் கஸ் அட்கின்சன் பந்து வீச்சில் அந்தப் பெருமையை பெற்றிருந்தார். தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதே மைதானத்தில் சதம் அடித்து மீண்டும் லார்ட்ஸ் மைதான பலகையில் தனது பெயரை இடம்பெறச் செய்து இருக்கிறார்.

ஒரு வீரர் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் அல்லது ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினாலோ அல்லது ஒரு போட்டியில் சதம் அடித்தாலோ அவரது பெயர் லார்ட்ஸ் மைதான பலகையில் பொறிக்கப்படும். அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்தியும், இலங்கை அணிக்கு எதிராக சதம் அடித்தும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு விதமான லார்ட்ஸ் மைதான பலகைகளில் தனது பெயரை பொறிக்கச் செய்திருக்கிறார் கஸ் அட்கின்சன்.

ஒரே ஆண்டில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் லார்ட்ஸ் மைதான பலகையில் இடம் பெற்ற இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார் கஸ் அட்கின்சன். மேலும், உலகிலேயே லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே ஆண்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் பலகையில் இடம் பெற்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார். முன்னதாக இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் 1978இல் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இந்த சாதனையை செய்து இருந்தார். இந்தியாவைச் சேர்ந்த வினூ மன்கட் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியும், சதம் அடித்தும் இந்த உயரிய சாதனையை செய்து இருந்தார்.

Story first published: Saturday, August 31, 2024, 7:00 [IST]
Other articles published on Aug 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+